Thursday, July 9, 2020

4 மாதமாக நரக வேதனை.. இருட்டு அறையில் சித்ரவதை.. போலீசும், டாக்டரும் செய்த கொடூரம்.!!

4 மாதமாக நரக வேதனை.. இருட்டு அறையில் சித்ரவதை.. போலீசும், டாக்டரும் செய்த கொடூரம்.!!

ஒடிஷா மாநிலத்தில் உள்ள பிரமித்தாராபூர் பகுதியில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி 14 வயது சிறுமி அங்கு நடைபெற்ற கண்காட்சியை காண வந்துள்ளார். இந்நிலையில், அன்று இரவு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் ஊருக்கு செல்ல வழியில்லாமல் நின்ற சிறுமியை கவனித்த அப்பகுதி இன்ஸ்பெக்ட்டர், பாதுகாப்பு தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த நான்கு மாதமாக சிறுமியை மறைமுகமாக வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனால் சிறுமி தற்போது கர்ப்பமடையவே, இதனை அறிந்த காவல் அதிகாரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அழைத்து சென்று தனது பதவியை வைத்து கருக்கலைப்பு செய்துள்ளார். கருக்கலைப்பு செய்த பின்னர் சிறுமி எப்படியோ தப்பித்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
அங்கு தனது பெற்றோர்களிடம் நடந்ததை கூறவே, பெற்றோர்கள் அங்குள்ள எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளனர். எஸ்.பியின் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கருக்கலைப்பு செய்த அரசு டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Monday, July 6, 2020

ஐபிஎல் 2020 தொடரை நடத்த முன்வந்த 3 ஆவது நாடு!

ஐபிஎல் 2020 தொடரை நடத்த முன்வந்த 3 ஆவது நாடு!

கரோனா வைரஸ் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்த முடியாமல் போனால் தொடரை தங்கள் நாட்டில் நடத்த நியூசிலாந்து முன்வந்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை தங்கள் நாட்டில் தொடரை நடத்த ஆர்வம் காட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையை ஒத்திவைக்கும் அறிவிப்பு வந்தால் உடனடியாக ஐபிஎல் தொடர் குறித்த அறிவிப்பும் வெளிவந்துவிடும்.
பி.சி.சி.ஐ ஏற்கனவே ஐ.பி.எல் தொடரை செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்தவே பிசிசிஐ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
"இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்துவது முதல் தேர்வாக இருக்கம், ஆனால் சூழ்நிலை பாதுகாப்பாக இல்லாவிட்டால், அடுத்த தேர்வு வெளிநாடாகத்தான் இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கைக்குப் பிறகு, நியூசிலாந்து ஐபிஎல் போட்டியை நடத்த முன்வந்துள்ளது" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், "நாங்கள் அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசிப்போம். வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதில் எந்த சமரசமும் இருக்காது" என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் இதற்கு முன்னதாக வெளிநாட்டில் நடந்துள்ளது. 2009 ஆம் ஆண்டின் முழு பதிப்பும் தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இதேபோல் 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சில போட்டிகள் நடந்தது.
ஒருவேளை ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் நடந்தால், போட்டியை நடத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தான் முன்னணியில் உள்ளது.

Sunday, July 5, 2020

உலகளவில் 1 கோடி பேருக்கு கொரோனா தொற்று பரவல்

உலகளவில் 1 கோடி பேருக்கு கொரோனா தொற்று பரவல்

கொரோனா பெருந்தொற்று உலகளவில் 1 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் ஆபத்தான நிலையை எட்டி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள பல நாடுகளில் வைரஸ் பரவல் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், உலகின் சில நாடுகள் இப்போது இந்த நோய் மிக வேகமாகப் பரவுவதைக் காண முடிகிறது.
கொரோனா தொற்று முதன் முதலில் 10 லட்சம் பேருக்குப் பரவ மூன்று மாதங்கள் ஆனது. ஆனால், தற்போது வெறும் 8 நாட்களில் 10 லட்சம் பேருக்கு பரவியுள்ளது.
கொரோனா: சில நாடுகளில் தொற்று அதிகரிக்கவும், குறையவும் என்ன காரணம்?

எங்குத் தொற்று வேகமாகப் பரவுகிறது?

அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகள் தொற்று எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே உலகிலே அதிக கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ள அமெரிக்காவில் தற்போது இன்னும் தொற்று அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் 40,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் அரிசோனா, டெக்சாஸ், புளோரிடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவை எல்லாம் இரண்டாம் அலை தொற்று அல்ல. பொது முடக்கக் கட்டுப்பாடுகளை இந்த மாகாண அரசுகள் மிக விரைவிலே தளர்த்தியதால் ஏற்பட்ட விளைவு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
10 லட்சத்துக்கும் அதிகமான தொற்றுகளுடன் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலிலும், தொற்று அபாயகரமாக அதிகரித்து வருகிறது.
சாவோ பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ போன்ற பெரிய நகரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரேசிலில் உள்ள மற்ற பகுதிகளில் மிகக்குறைவாகவே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் இங்கு உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்தியாவில் சமீபத்தில் ஒரே நாளில் 15,000 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் மிகக்குறைவான அளவிலே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அங்கெல்லாம் அதிக பரிசோதனைகள் செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வளர்த்து வரும் நாடுகளில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

Saturday, July 4, 2020

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் ஜூன் 4 ம் தேதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பாதையில் போர்நிறுத்தத்தை மீறியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் ஜூன் 4 ம் தேதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பாதையில் போர்நிறுத்தத்தை மீறியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் ஜூன் 4 ம் தேதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பாதையில் போர்நிறுத்தத்தை மீறியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இரவு 7.45 மணியளவில் மோட்டார் ஷெல் மற்றும் சிறிய கை துப்பாக்கிச் சூடு எல்லையைத் தாண்டி தொடங்கியது என்று அவர் கூறினார். டெக்வார் துறையில் மற்றும் இந்திய இராணுவம் ஒரு பொருத்தமான பதிலை அளித்தது. கடைசியாக அறிக்கைகள் வந்தபோது எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடந்து வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்திய தரப்பில் எந்த விபத்து ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை.

வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்

வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்

ஹனோய்: ஊரடங்கு முடிந்த நிலையில், வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறக்கப்பட்டது. சாப்பிடும் தட்டு முதல் டாய்லெட் வரை எல்லாமே தங்க முலாம் பூசப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தியதையடுத்து வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் புதியதாக திறக்கப்பட்டது. விருந்தினர்களை கவர்வதற்காக தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள் மற்றும் கழிப்பறைகள், சுவர்கள் என, எல்லாமே ஒரே தங்கத்தால் ஆன ஓட்டல் போல் காட்சியளிக்கிறது....
வீடியோவை வெளியிட்டு எதன் மீது தனக்கு காதல் என்பதை வெளிப்படுத்திய கோலி..!

வீடியோவை வெளியிட்டு எதன் மீது தனக்கு காதல் என்பதை வெளிப்படுத்திய கோலி..!


இந்திய கிரிக்கெட் அணியில் பிட்னஸில் எப்போதும் அதிக கவனம் செலுத்துவது கேப்டன் விராட் கோலி என்பதை யாராலும் மறுக்க முடியாது. பலமுறை பேட்டிகளில் தன்னுடைய சிறந்த ஆட்டங்களுக்கு காரணமே, எனது உடல் பிட்னஸ் என்றும், வீரர்களுக்கு இது மிகவும் அவசியம் என கூறியுள்ளார்.
கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு சமயங்களில் வீரர்கள் தங்களின் வீடுகளில் இருந்து கொண்டு, ஆன்லைன் சாட்டில் ஈடுபட்டிக் கொண்டிருந்த வேளையில், விராட் கோலி தனது பிட்னஸில்தான் அதிக கவனம் செலுத்தினார். அவர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு வீடியோக்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், அதிக எடையுடன் பளுதூக்கும் வீடியோவை விராட் கோலி வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவுடன், 'தினமும் உடற்பயிற்சி செய்வதில், தனக்கு பிடித்தமான பளுதூக்குதலை தேர்வு செய்து, அதனை செய்வேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்டும் ராஜஸ்தான்

உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்டும் ராஜஸ்தான்


உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் மொதாரா கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1.10 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கலாம். அதன்பின் ஆஸ்திரேலியாவில் 1.02 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய மெல்போர்ன் மைதானம் உள்ளது.
இந்நிலையில் 75 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்ட இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சோன்ப் கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தில் சுமார் 350 கோடி ரூபாயில் இரண்டு கட்டமாக கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது.
வேலை தொடங்குவதில் இருந்து இரண்டு வருடத்திற்குள் மைதானம் தயாராகி விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பயிற்சி மைதானங்கள் அமைக்கப்படும். இரண்டையும் ரஞ்சி கோப்பை போட்டிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் 30 வலைப்பயிற்சி பகுதியும், 250 பேர் அமரும் வகையில் பத்திரிகையாளர்கள் அறையும் கட்டப்பட இருக்கிறது.
கல்லூரி தேர்வுகளை நடத்தலாமா? வேண்டாமா? ஆராய குழு அமைப்பு

கல்லூரி தேர்வுகளை நடத்தலாமா? வேண்டாமா? ஆராய குழு அமைப்பு


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ.) 62-வது கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்கலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ அறிவித்தது. பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக அங்கீகாரத்தை ஜூலை 15-ந்தேதிக்குள் வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கல்லூரி தேர்வுகளை நடத்துவது குறித்து ஆராய தமிழக அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உள்ளிட்ட 11 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். கொரோனா பொது முடக்கத்தால் தடை செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது பற்றி இக்குழு ஆராய உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்கள்படி, தேர்வுகளை நடத்துவது குறித்து இந்தக் குழுவினர் அரசுக்கு பரிந்துரை வழங்க உள்ளனர்.
பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

ஆர்ஆர் குளோபல் நிறுவனத்தின் பிகாஸ் பிராண்டு இந்தியாவில் பி8 மற்றும் ஏ2 என அழைக்கப்படும் இரண்டு புதிய ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில், பி8 மாடலில் 1900 வாட், ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட மோட்டார் மற்றும் 1.45 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், லீட் ஆசிட் பேட்டரி அல்லது கழற்றக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை பயன்படுத்த முடியும். இந்த பி8 மாடல் லீட்-ஆசிட் மாடல், லித்தியம் அயன் மாடல் மற்றும் எல்1 தொழில்நுட்பம் கொண்ட மாடல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. மூன்று வேரியண்ட்களும் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் டாப் மாடலில் நேவிகேஷன் அசிஸ்ட், ரைட் மெட்ரிக்ஸ், ஜியோ ஃபென்சிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிகாஸ் ஏ2 மாடலில் 250 வாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் லீட் ஆசிட் பேட்டரி அல்லது கழற்றக்கூடிய 1.29 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. பிகாஸ் பி8 மற்றும் ஏ2 ஸ்கூட்டர்கள் மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கின்றன. இவை புளூ, வைட் மற்றும் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவை, ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ. 1.4 லட்சம் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
எல்.ஜி நிறுவனத்தின் உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்

எல்.ஜி நிறுவனத்தின் உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்

எல்ஜி நிறுவனம் உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடனான போட்டியை எதிர்கொள்ள முயற்சியாக வெளியாகியுள்ளது. பிராஜக்ட் பி பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
எல்ஜி நிறுவனம் கடந்த ஆண்டு விண்ணப்பித்த காப்புரிமை அடிப்படையில் பிராஜக்ட் பி ஸ்மார்ட்போன் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் நீளும் வகையிலும், தேவையற்ற போது மடித்து வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ப்ரோடோடைப் மாடலை எல்ஜி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி நிறுவனத்தின் இரண்டாவது ரோபிள் சாதனம் ஆகும். முன்னதாக எல்ஜி சிக்னேச்சர் ஒஎல்இடி டிவி ஆர் மாடலை 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காட்சிப்படுத்தியது. பிராஜக்ட் பி திட்டத்தில் வளையும் தன்மை கொண்ட ஒஎல்இடி பேனலை எல்ஜி உருவாக்கவில்லை. இதனை சீன டிஸ்ப்ளே உற்பத்தி செய்யும் பிஒஇ நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
டார்க் மோட் வசதி அறிமுகம் செய்த வாட்ஸ்அப்

டார்க் மோட் வசதி அறிமுகம் செய்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் வெப் சேவையில் புதிதாக டார்க் மோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. இந்த அம்சத்தை பெற ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறந்து வாட்ஸ்அப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி கணினியில் வாட்ஸ்அப் வெப் வலைதளம் திறந்து அதிலுள்ள கியூ ஆர் கோடினை ஸ்மார்ட்போன் கொண்டு ஸ்கேன் செய்ய வேண்டும்.
கணினியில் வாட்ஸ்அப் வெப் தளம் திறந்ததும், செட்டிங்ஸ் பேனலில் தீம் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், தீம் ஆப்ஷனில் டார் பட்டனை க்ளிக் செய்து டார்க் மோட் தீமை செயல்படுத்தி கொள்ளலாம்.
வாட்ஸ்அப் வெப் பதிப்பில் டார்க் மோட் வசதி தவிர, வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், கியூ ஆர் கோட் மூலம் காண்டாக்ட்களை சேர்க்கும் வசதி, வீடியோ கால்களில் அதிகபட்சம் 8 பேருடன் உரையாடும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. வாட்ஸ்அப் செயிலியின் புதிய அம்சங்களில் வரும் வாரங்களில் பயனர்களுக்கு வழங்கப்படும் என வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான போலீஸ்காரர் முத்துராஜிடம் சிபிசிஐடி விடிய விடிய விசாரணை

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான போலீஸ்காரர் முத்துராஜிடம் சிபிசிஐடி விடிய விடிய விசாரணை

* திடுக் தகவல்கள் அம்பலம்: கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் முத்துராஜிடம் சிபிசிஐடி போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதில் அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்துக்கட்சியினர், பிரபலங்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக வியாபாரிகள் இறந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்ெபக்டர் தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மற்றொரு போலீஸ்காரரான முத்துராஜ் அப்ரூவராக மாறியதாகவும், சிபிசிஐடி போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதாகவும் தகவல் பரவியது.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிபிசிஐடி ஐஜி சங்கர் இதை மறுத்தார். இந்நிலையில் நேற்றிரவு விளாத்திகுளம் அருகே பூசனூரில் உறவினருடன் பைக்கில் வந்த போலீஸ்காரர் முத்துராஜை விளாத்திகுளம் டிஎஸ்பி பீர்முகைதீன், இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் மடக்கி கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடியில் சிபிசிஐடி போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.சிபிசிஐடி போலீசார் அவரிடம் விடியவிடிய தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட விதம், விசாரணையின் போது அவரை யார், யார் தாக்கினர்? சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தாக்குதல் நடந்த இடம், உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆகியவை குறித்து விவரித்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை விசாரணை முடிந்ததும், அவரை உடல் பரிசோதனை செய்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் அவரை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி, தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.


பிரண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை
சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் கூறியதாவது:சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம். எப்ஐஆர் என்பது முதல் தகவல் அறிக்கை மட்டும் தான். விசாரணையின் போக்கில் மேலும் குற்றவாளிகள் சேர்க்கப்படலாம். யாரையும் சிபிசிஐடி போலீசார் அப்ரூவராக மாற்ற முயற்சிக்கவில்லை. பெண் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொருவராக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடும் விசாரணையில் இல்லை. விசாரணை நேர்மையாகவும், நடுநிலையாகவும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையம் உள்ளிட்ட சில இடங்களின் சிசிடிவி பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நபர்கள் மீதும் புகார்கள் வந்துள்ளது. அந்த நேரத்தில் பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை நடத்துவோம் என்றார்.
சாத்தான்குளம் கொலை வழக்கு: ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளம் கொலை வழக்கு: ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்த கூறப்படும் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் இன்று மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உதவி சார்பு ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு காரணங்கள்
இந்நிலையில் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் இன்று மாலை திடீரென மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட சிறையில் பாதுகாப்பு பிரச்சனை உள்ளதால் சிறைத்துறை நிர்வாகம் அவர்களை மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடவடிக்கை எடுக்கப்படும்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இணையதளங்கள், சமூக ஊடகங்களில் தவறான கருத்துகள் பரப்பினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இணையதளங்கள், சமூக ஊடகங்களில் சிலர் தவறான கருத்துகள் உள்நோக்கத்துடன் பரப்பி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அது பாதிக்கும்.
சிபிசிஐடி இந்த வழக்கை நேர்மையாகவும், நடுநிலையாகவும் விசாரித்து வருகிறது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறது.
சமூக ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம். இந்த வழக்கு சம்பந்தமாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பகிரக் கூடாது என சிபிசிஐடி ஐஜி சங்கர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
  • பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
  • பிபிசி தமிழ் ட்விட்டர்
  • பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
  • பிபிசி தமிழ் யு டியூப்
source: bbc.com/tamil
சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தி வரும் இந்திய செயலிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில், அவற்றின் ஆற்றலை அளவிடுவதில் கவனம் செலுத்தும் சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கி வைத்தார்.
உலகத்தரம் வாய்ந்த மேட் இன் இந்தியா செயலிகளை உருவாக்குவதில் , தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் இடையே பெரும் ஊக்கம் தற்போது காணப்படுகிறது. அவர்களது சிந்தனைகளுக்கும், பொருள்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், @GoI_MeitY and @AIMtoInnovate ஆகியவை சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கியுள்ளன.
உங்களிடம் இது போன்ற செயல்படுத்தும் பொருள் இருந்தாலோ அல்லது இதுபோன்ற பொருள்களை உருவாக்கும் தொலைநோக்கும், வல்லமையும் உங்களிடம் இருப்பதாகக் கருதினாலோ, இது உங்களுக்கான சவாலாகும். தொழில்நுட்ப சமுதாயத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்'', என்று பிரதமர் கூறினார்.
ஜூம் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஜியோ மீட்' அறிமுகம்

ஜூம் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஜியோ மீட்' அறிமுகம்

தினமலர்:  புதுடில்லி: ஜூம் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஜியோ மீட்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு போன்ற பாதுகாப்பின்மை காரணமாக ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் ஜூம் செயலிக்கு பதிலாக 'ஜியோமீட்' என்ற செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் உள்ளிட்ட சேவைகளைப் போலவே ஜியோ மீட் செயலி மூலமாக எச்டி தரத்திலான வீடியோ அழைப்புகளை ஏற்க முடியும். அதேநேரம் ஜூம் செயலி போல இதில் 40 நிமிடம் மட்டும் தான் என்ற நேர வரம்பு இல்லை. 24 மணிநேரமும் நாம் வீடியோ அழைப்புகளை நீட்டிக்கலாம்.ஜியோமீட் மூலம் மேற்கொள்ளப்படும் அனைதது டிஜிட்டல் சந்திப்புகளுக்கும் பாஸ்வேர்டு மற்றும் என்கிரிப்சன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜியோ மீட்டை, கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே இது லட்சம் பதிவிறக்கங்களை கடந்து விட்டது. ஜியோ மீட் மூலம் 'மேட் இன் இந்தியா' என்ற ஹேஷ்டேக் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. ஃபேஸ்புக் மற்றும் இன்டெல் நிறுவனங்களில் முதலீட்டைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் டிஜிட்டல் சாம்ராஜியத்தையும் விரிவுபடுத்தி உள்ளது.
“என்னை ஏன் விராட் கோலியோட ஒப்பிடுறீங்க..?”- கொதித்த பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன்

“என்னை ஏன் விராட் கோலியோட ஒப்பிடுறீங்க..?”- கொதித்த பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்பவர் பாபர் அசாம். பாகிஸ்தான் அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டனாகவும் அவர் செயல்பட்டு வருகிறார். அவரின் ஆட்டத் திறன் மற்றும் பேட்டிங் ஸ்டைலை வைத்துப் பலரும் அவரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியோடு ஒப்பிடுவது வழக்கம். இப்படி பலர் ஒப்பிட்டு வருவது குறித்துப் பேசியுள்ள அசாம், “என்னை யாரோடாவது ஒப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்களோடு ஒப்பிடுங்கள். விராட் கோலியோடு மட்டுமே ஒப்பிட வேண்டாம். எங்கள் நாட்டிலும் ஜாவத் மியாண்டட், யூனிஸ் கான், இன்சமாம்-உல்-ஹக் உள்ளிட்ட பல லெஜண்டுகள் உள்ளனர். இதைப் போன்ற ஜாம்பவான்களோடு என்னை ஒப்பிட்டால், அதை நான் மிகவும் விரும்புவேன். அது எனக்கு இன்னும் பெருமையாக இருக்கும்” என்று வெளிப்படையாக பேசியுள்ளார். 
Babar Azam is very Close to Being in the Same Class as Virat Kohli" Says  Misbah Ul Haq - EssentiallySports
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் பாபர் அசாம். ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் கோலி. 
25 வயதாகும் அசாம், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் 50 பேட்டிங் சராசரிக்கு மேல் வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 45-க்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து சென்றுள்ள 20 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாமும் உள்ளார். பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரானது எப்போது தொடங்கும் என்பது குறித்து இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. 
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட்டிற்கு பிரேக் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரும் 8 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 
 
ரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா? முதல்வருக்கு கடிதம்!

ரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா? முதல்வருக்கு கடிதம்!


ரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா? முதல்வருக்கு  கடிதம்!மின்னம்பலம் : நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை நிறுத்திவைக்க வேண்டுமென முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சுமார் ரூ. 10,000 கோடி அளவுக்கு தமிழகம் முழுவதும் டெண்டர் விடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புகளை செய்து பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் திட்டமிடப்பட்டுள்ள டெண்டர்கள் குறித்து பல விமர்சனங்களும், கேள்விகளும் எழும்பியுள்ளன. ஏற்கனவே, சென்னை, உயர்நீதிமன்றத்திலும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இதனை நிறுத்திவைக்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதுதொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், “தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் மட்டும் 833 கி.மீ.க்கு ரூ. 1827 கோடி திட்டம் மதிப்பீடு உள்பட டெண்டருக்கான அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் (பி.பி.எம்.சி.) ஒரு கி.மீ.க்கு ரூ. 2.25 கோடி மதிப்பீடு செலவில் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் இதே போல பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் (பி.பி.எம்.சி.) திட்டமிடப்பட்ட சாலைகளுக்கு சராரியாக ஒரு கி.மீ.க்கு ரூ. 1.30 கோடி செலவுக்கு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒரு கி.மீ.க்கு ரூ. 2.25 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது அதீத மதிப்பீடாக உள்ளது. இதற்கான காரணங்கள் வெளிப்படையாக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று மிகவும் தீவிரமடைந்து வருவதாகவும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும், இதை எதிர்த்து ஒரு தீவிரமான போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறிய பாலகிருஷ்ணன், “ஏற்கனவே தமிழக அரசின் நிதி நிலைமை மிகுந்த நெருக்கடியில் உள்ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி ரூ. 4.53 லட்சம் கோடி மாநிலத்திற்கு கடன் சுமை உள்ளது. நடப்பாண்டு நிதிப்பற்றாக்குறை ரூ. 43 ஆயிரம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு மாநிலத்தின் சொந்த வருவாய் பெருமளவு பாதித்துள்ளது. மாண்புமிகு. முதலமைச்சரின் அறிவிப்பின் படி நடப்பாண்டில் கொரோனாவால் ரூ. 85 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.” என்றும் கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி மாநிலத்தின் வருவாய் குறைந்து வரும் சூழலில் திட்டமிடாத பல செலவுகள் அதிகமாகிக் கொண்டுள்ளன. குறிப்பாக, கொரோனா நோய்த் தொற்றுக்காக மருத்துவம், சுகாதாரப் பணிகளுக்காக பல ஆயிரம் கோடி செலவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மருத்துவ பணிகளுக்காகவும், நிவாரணப் பணிகளுக்காகவும் தமிழக அரசு ஒதுக்கியுள்ள தொகை மிகச் சொற்பமானதே. அடுத்த பல மாதங்களுக்கு நோய்த் தொற்று மற்றும் மருத்துவ பணிகளுக்காகவும், மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காகவும் மேலும் பல ஆயிரம் கோடிகளை செலவழிக்க வேண்டியுள்ளது. மத்திய அரசும், தமிழக அரசு கோரியுள்ள நிதியினை வழங்கவில்லை. கடன் தொகையைப் பெற்றே தற்போது தமிழக அரசு நிலைமைகளை சமாளித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று மற்றும் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து மக்களை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசின் முன் உள்ளது என்று கூறிய பாலகிருஷ்ணன்,
எனவே, சாலைகள், பொதுப்பணித்துறை மற்ற பணிகள் அவசியம் என்ற போதிலும், கொரோனாவை எதிர்த்த பணிக்கு கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் வகையில், தமிழக அரசு திட்டமிட்டு பணியாற்றுவதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இத்தகைய சூழ்நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ. 10,000 கோடிக்கான டெண்டர்களை கோருவதும், அதிலும் மேலே குறிப்பிட்டுள்ள பல விமர்சனங்களும், கேள்விகளும் எழும்பியுள்ள நிலையில் இந்த டெண்டர் அவசியம் தானா என கேள்வி எழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “.தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறையில் மிகவும் அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளைத் தவிர இதர பணிகளுக்கான டெண்டர்களை நிறுத்தி வைத்து, அந்த நிதியினை கொரோனா மருத்துவம் மற்றும் மக்களது நிவாரணப் பணிகளுக்கு செலவழிக்க வேண்டும்” என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
எழில்
சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு

சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு


சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு
 தினந்தந்தி : சாத்தான்குளத்தில்  தந்தை - மகன் கைது சம்பவத்தை நேரில் பார்த்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. தூத்துக்குடி, சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை அடிப்படையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன்,   ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களை தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.   திங்கள் கிழமை மனு தாக்கல் செய்து காவலர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள், உறவினர்களை குறுஞ்செய்தி மூலம் அழைத்து சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.  இதற்கிடையே, பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரிடம் 2-வது நாளாக விசாரணை தொடர்ந்து வருகிறது
வேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர் Ida S. Scudder

வேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர் Ida S. Scudder

rajiyinkanavugal.blogspot.com :  அன்னை தெரசாவுக்கு முன்னோடியான ஐடா ஸ்கடர்
எங்கயோ பிறந்து, எங்கயோ வளர்ந்து நம்ம நாட்டுக்கு பிழைக்க வந்தவங்க, நம் மண்மீதும் நம் மக்களின்மீதும் அக்கறைக்கொண்டு தன் வாழ்க்கையே அர்ப்பணிச்ச அன்னை தெரசாவை பத்தி நமக்கு தெரியும். அவங்களுக்கு முன்னமயே  மருத்துவ பணிக்காக தன்னையே அர்ப்பணித்த ஐடா ஸோஃபியா ஸ்கடர் (Ida Sophia Scudder ) பத்தி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! இவங்கதான் அன்னை தெரசாவுக்கே வழிக்காட்டி சொன்னால் நம்ப முடியுமா?! 
ஆனா, அவங்களால் உருவாக்கப்பட்டு இன்னிக்கு ஆசியாவின் இரண்டாவது மருத்துவமனைன்னு பேரெடுத்த கிறித்துவ மெடிக்கல் கல்லூரி  christian medical college பத்தி எல்லோருக்குமே தெரியும்.  இந்த கல்லூரி சமீபத்தில் தனது நூற்றாண்டு விழாவினை கொண்டாடியது. ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்த இந்தியாவில் சுகாதாரம் பின்தங்கி இருந்தது. அப்போது இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 25 வயதுதான். ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ வசதி எட்டாக்கனியாகவே இருந்தது. 1877-ல் நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவியது. பட்டினிச்சாவு மட்டும் கிட்டத்திட்ட 50 லட்சத்தைத் தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு, ஒரு வேளை உணவுகூட கொடுக்க முடியாத நிலையே அந்நாளில் இருந்தது.
அந்தக்காலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் இந்தியாவில் மருத்துவச்சிகிச்சை அளிப்பது, உணவு வழங்குவது போன்ற பணிகளைச் செய்துவந்தன. அப்படி இந்தியா வந்தவர்களில் டாக்டர் ஜான் ஸ்கடரும் ஒருவர். பஞ்சத்தால் ஏற்பட்ட கோரக்காட்சிகளைத் தினமும் பார்த்த ஜானின் ஏழு வயது சிறுமி, இனி, தன் தந்தையோடு அவர் நாட்டிற்கு திரும்பிச்சென்றபின், தன் வாழ்நாளில் இனியொரு முறை இந்தியாவுக்கு வரக்கூடாது என்றும் மிஷனரி பணியில் ஈடுபடக்கூடாது என்றும் தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டார். ஆனா, அவரால்தான் மிகப்பெரிய மருத்துவக்கல்லூரி உருவாக வேண்டுமென்பது இறைவன் வகுத்து வைத்திருந்தான் போலும்!!
டாக்டர் ஜான் ஸ்கடர் - சோஃபியா வெல்ட் ஸ்கடர் தம்பதியருக்கு  மகளாக 1870 டிசம்பர் 9ம் தேதி ராணிப்பேட்டையில் ஐடா ஸ்கடர் பிறந்தார். மிஷனரி பணியில் தங்களை முழுமையாக ஈடுபட்ட தன் குடும்பத்தினரின் வழியில் செல்ல ஐடாவுக்கு அப்போது விருப்பமில்லை. அமெரிக்கா திரும்பிய ஸ்கடர், படிப்பில் கவனம் செலுத்தினார். ஐடாவின் பெற்றோர் மட்டும் இந்தியாவில் மிஷனரி பணிகளில் ஈடுபட்டுவந்தனர். அவர்களைப் பார்க்க மீண்டும் இந்தியா வரவேண்டிய கட்டாயம் ஐடாவுக்கு ஏற்பட்டது. திரும்ப இந்திய வந்த  ஐடாவின் பயணம் அவர் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. வேலூரில் மிஷனரி பணியில் ஈடுபட்டிருந்த பெற்றோருடன் சிறிது காலம் அவர் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தார். அப்போது ஐடாவுக்கு 14 வயது. மருத்துவப்பணிக்காக திண்டிவனத்தில் தங்கி இருந்தபோது, ஒரு நாள் இரவு வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஐடா கதவைத் திறந்தார். வாசலில் நின்றிருந்த ஓர் இஸ்லாமிய இளைஞர் முகத்தில் படபடப்போடும், பதற்றத்தோடும் நின்றிருந்தார்.
கதவை திறந்த ஐடா ஸ்கடரை கண்ட இளைஞர் அவர்தான் டாக்டர் என எண்ணி, தன் மனைவிக்கு பிரசவ வலி எடுத்திருப்பதாகவும், அவளுக்கு 14 வயதுதான் எனவும், அவளை காப்பாற்றி தர, தன்னோடு வரும்படி அழைத்தார்.  அதற்கு, ஐடா, தான் டாக்டர் இல்லையென கூறி, தன் தந்தைதான் டாக்டர், அவரை அழைத்துச்செல்லுமாறு சொல்லி, தந்தையை அழைக்க வீட்டினுள் செல்ல முயன்றார். அம்மா! ஆண்கள் பிரசவம் பார்ப்பது எங்களது சமயத்தில் இல்லைன்னு சொல்லி சென்றார். மீண்டும் தனது புத்தகத்தில் ஆழ்ந்த ஐடாவை மீண்டும் கதவொலி கலைத்தது. இப்போது வாசலில் நின்றிருந்தவர் ஒரு அந்தணர். அவரும் தனது மனைவிக்கு பிரசவம் பார்க்க அழைக்க, தான் டாக்டர் இல்லையென சொல்லி, தன் தந்தையை அழைக்க முற்பட, எங்கள் குலவழக்கில் ஆண் பிரசவம் பார்த்தலாகாதுன்னு சொல்லி அவரும் திரும்பி சென்றுவிட்டார். மீண்டும் புத்தகம் படிக்க சென்ற ஐடாவை மீண்டும் கதவொலி கலைக்க இந்தமுறை வந்தவர் ஒரு கிறித்துவர். முன் இருவர் போலவே இவரும் ஐடாவின் தந்தையை மறுத்து சென்றார். சொல்லி வைத்தாற்போல் மூவரின் மனைவியுமே பிரசவிக்க முடியாமல் இறந்து போயினர். இது ஐடாவின் காதுக்கு வந்தது.
மூன்று விதமான சமயத்தை சேர்ந்தவர்கள் ஒரே காரணத்துக்காக தன்னை அழைத்ததையும், தன் தந்தையை ஆண் மருத்துவர்ன்னு சொல்லி மறுத்து சென்றதையும், மூவரின் மனைவியும் ஒருசேர இறந்ததையும் நம்ப முடியாமல், தனக்குள் பலக்கேள்விகளை எழுப்பிக்கொண்டார். தனக்குத்தான் மருத்துவம் தெரியாதே! பின் எப்படி மருத்துவம் பார்க்க முடியும்?! என்ற பதிலையும் அவரே சொல்லிக்கொண்டார்.  மனப் போராட்டத்துக்கு நடுவே அன்றைய இரவு கழிந்தது. மறுநாள் மூன்று பெண்களின் சவ ஊர்வலம் செல்வதை ஐடா பார்த்தார்.  ஒருவித குற்றவுணர்வு அவரை ஆட்கொண்டது. விதியின்மேல் பழியைப்போட்டு தப்பித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. தனது எதிர்காலத்துக்கான விடையை அப்போது அவர் கண்டுகொண்டார்.
தான் மருத்துவம் படித்து மிஷனரி பணியில் ஈடுபட விரும்புவதாக ஐடா தெரிவிக்க, அவருடைய பெற்றோருக்கு ஆச்சரியம். இந்தியாவின் பஞ்சத்தை கண்டு அருவருப்புக்கொண்ட தன் மகள் இப்படி ஒரு முடிவெடுத்ததைக்கண்டு திகைத்தனர்.   தந்தை ஜான் ஸ்கடர் (ஜூனியர்), தாத்தா ஜான் ஸ்கடர் (சீனியர்) இருவருமே மருத்துவர்கள். தவிர ஐடாவின் தாத்தா டாக்டர் ஜான் ஸ்கடர், அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மிஷனரி பணிக்காக வந்த முதல் மருத்துவரும்கூட! மருத்துவம் படிக்க அமெரிக்கா சென்ற ஐடா ஸ்கடர், பிலடெல்ஃபியா மருத்துவக் கல்லூரியில் 1895-ல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பு முடிந்ததும் ஐடாவின் மிஷனரி பணிக்குத் தோழி ஆனி ஹான்காக் உதவினார். வேலூரில் பெண்களுக்கென மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஐடாவுக்கு இருந்தது. மருத்துவமனை தொடங்க எட்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். ஐந்து, பத்து அமெரிக்க டாலராகச் சேர்க்கும் நிதியால் இலக்கை எட்ட முடியுமா என்ற அச்சமும் ஐடாவுக்கு இருந்தது.

ஒரு நாள் நிதி திரட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றின் தலைவியாக இருந்த டேபர் என்பவரைச் சந்தித்தார். டேபருடன் ஷெல் என்ற முதியவரும் இருந்தார். முதியவரை அங்கேயே இருக்குமாறு கூறிய டேபர், அடுத்த அறைக்கு ஐடாவை அழைத்துச் சென்றார். இந்தியாவில் நிலவும் பெண்களின் பிரச்சினைகளையும் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் ஐடா விளக்கினார். அவற்றைப் பொறுமையாகக் கேட்ட டேபர், அறக்கட்டளை கூட்டத்தில் நிதி திரட்டிக்கொள்வதற்குப் பேச வாய்ப்பளித்தார். நம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்ட ஐடாவுக்கு மறுநாள் காலை ஒரு கடிதம் வந்தது. டேபரின் வீட்டில் பார்த்த முதியவர் ஷெல், அறக்கட்டளைக்குச் செல்லும் முன்பாகத் தன்னை ஒரு முறை பார்த்துச் செல்லும்படி எழுதியிருந்தார்.

ஷெல்லைப் பார்க்கச் சென்றார் ஐடா ஸ்கடர். ஐடாவும் டேபரும் முதல் நாள் பேசியதைக் குறிப்பிட்ட அவர், மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னார். வேலூரின் மக்கள்தொகை, ரயில்பாதை வசதி, மருத்துவமனை கட்டிடம் எப்படிக் கட்டப்படும் என்றெல்லாம் கேட்டார். ஐடாவின் பதில் ஷெல்லுக்குத் திருப்தியளிக்க, 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை ஐடாவிடம் நீட்டினார் ஷெல். இன்ப அதிர்ச்சியில் இருந்த ஐடாவிடம், ‘‘என் அன்பு மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக, வேலூரில் பெண்கள் மருத்துவமனை அமைக்க நிதியுதவி அளிக்கிறேன். அவர் உயிரோடு இருந்திருந்தாலும் உதவி செய்திருப்பார்’’ என்று கூறினார்.
தேவைக்கு அதிகமாகவே கிடைத்த பணத்துடன் இந்தியாவுக்கு புறப்பட ஐடா ஸ்கடர் தயாரானார். மீண்டும் ஷெல்லிடம் இருந்து ஐடாவுக்கு உதவி கிடைத்தது. மருத்துவமனைக்குத் தேவையான கருவிகள் அடங்கிய மரப்பெட்டி ஐடா புறப்படத் தயாரான கப்பலுக்கு வந்துசேர்ந்தது. தோழி ஆனி ஹான்காக்குடன் 1900 ஜனவரி மாதம் வேலூருக்கு வந்தார் ஐடா. இருவரும் மருத்துவப்பணியை உடனடியாகத் தொடங்கினர். கூடவே மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கியது. திட்டமிட்டபடி நாற்பது படுக்கைகளுடன் பெண்களுக்கான மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனை தொடங்கப்பட்டது.
அப்போது போதிய பயிற்சிப்பெற்ற செவிலியர்கள் இல்லாதது, ஐடாவின் மருத்துவப் பணிக்குப் பெருந்தடையாக இருந்தது.  செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஐடாவின் மனதில் உதித்தது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு எதிராக இருந்த சமூகக் கட்டமைப்புகளை எப்படி உடைப்பது என்ற கவலையும் அவருக்கு இருந்தது. ஆண்டுதோறும் பயிற்சி பெற்ற செவிலியர்களை கிராமங்களுக்கு அனுப்பினால் நிலைமை மாறும் என்று நம்பினார். செவிலியர் பள்ளியைத் தொடங்குவதற்கான பணியை ஐடா ஸ்கடர் 1908-ல் தொடங்கினார். சுற்றுவட்டார மிஷன் பள்ளிகளில் படித்த ஐந்து மாணவிகளுடன் செவிலியர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.
கோடை விடுமுறையில் அனைத்து மிஷனரிகளும் கொடைக்கானலில் ஒன்று கூடுவது வழக்கம். அப்படிக் கூடிய மிஷனரி டாக்டர்கள் மாநாட்டில் ‘தென்னகத்தில் பெண்களுக்கென்று ஒரு யூனியன் மருத்துவக் கல்லூரி வேண்டும்’ என்ற கருத்தை ஐடா ஸ்கடர் முன்வைத்தார். நூறாண்டுகளுக்குப் பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம் என்ற ஏளனக்குரல்கள் எழுந்தன. மாநாட்டில் பங்கேற்ற பெண் டாக்டர்கள் ஆன்டா கூக்ளர், மக்ஃபெயில் ஆகிய இருவரும் ஐடாவுக்கு பக்கபலமாக இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் 15 கோடி பெண்கள் இருந்த இந்தியாவில் 150 பெண் மருத்துவர்கள் மட்டுமே இருந்தனர். மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஐடாவின் எண்ணத்தை, தென்னிந்திய மிஷனரி மன்றம் ஏற்றுக்கொண்டது. வேலூரில் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி தொடங்குவது என்றும் அதற்கு ஐடாவே முதல்வராக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்காக 200 ஏக்கர் நிலமும் தயாராக இருந்தது.
1914-ல் ஐடா நெடு விடுப்பில் அமெரிக்காவுக்குச் சென்றார். அந்தநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915-ல் கடுமையான போர்ச்சூழலில் இந்தியா திரும்பிய ஐடா ஸ்கடர், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் துரிதப்படுத்தினார். மருத்துவமனை கட்டிடம் கட்ட பத்து லட்சம் அமெரிக்க டாலர் பணம் தேவைப்பட்டது. பல இன்னல்களுக்கு இடையில் 1918-ல் டிப்ளமோ மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதி, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து கிடைத்தது. எபி, கிருபம்மா, ஜெஸிலெட், லிஸி, நவமணி, லூஸி, தனம்மா, எலிசபெத், செஸிலியா, சோஃபி, தாய், கனகம், அன்னா, சாரம்மா ஆகிய 14 மாணவிகளுடன் முதல் ஆண்டு மருத்துவப் பள்ளி தொடங்கியது. 1918 ஆகஸ்ட் 12-ல் யூனியன் மிஷனரி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். அந்தக் காலத்தில் மற்ற ஏழு மருத்துவப் பள்ளிகளுக்கு இணையான வசதிகள் இல்லாதபோதும், அதற்கான சாத்தியங்களை ஐடா ஸ்கடர் ஏற்படுத்திக்கொடுத்தார்.
நான்கு ஆண்டுகள் கழித்து நடந்த தேர்வில் சென்னை மாகாண மருத்துவப் பள்ளிகளிலே யூனியன் மிஷனரி மருத்துவப் பள்ளி முதலிடத்தைப் பெற்றது. அன்று தொடங்கிய வெற்றிப் பயணம் இன்று 100 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.  நாற்பது படுக்கையுடன் தொடங்கி இந்த மருத்துவக்கல்லூரி 2695 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாய் பரந்து விரிந்திருக்கு. மகப்பேறு, இருதயம், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள், பற்கள், உணவுன்னு அனைத்துக்கும் தனித்தனி பிரிவுடனுடம், ஆய்வக வசதியுடன் ஒரே வளாகத்தில் சி.எம்.சி பிராதான மருத்துவக்கல்லூரி இருக்கு.  வேலூர் பாகாயத்தில் மனநல மருத்துவமனையும், வேலூர் நகரின் மையத்தில் கண் மருத்துவமனையும், சித்தூரில் ஒரு மருத்துவமனையும் செயல்படுது. ஒரேயொரு எலும்புக்கூட்டை வைத்து மருத்துவக்கல்லூரியை தொடங்கினார் ஐடா.
1948-ல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர். அதற்குப்பிறகு நடந்ததெல்லாம் பலரும் அறிந்த வரலாறு. ‘உலக அளவில் தொழு நோயாளிகளுக்கு முதல் அறுவைசிகிச்சையை டாக்டர் பால் பிராண்ட் தலைமையிலான குழுவினர் இங்கு செய்தனர். 1950 இறுதியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தியாவின் முதல் இதய அறுவைசிகிச்சையும் முதல் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையும் இங்குதான் நடைபெற்றன. முதல் மூளை நரம்பியல் சிகிச்சைப் பிரிவும் இங்கு தொடங்கப்பட்டது.
இங்கு படித்த பல மருத்துவர்கள் இந்தியாவின் முன்னணி மருத்துவர்களாக உள்ளனர்.  இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பிகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் மிஷனரி மருத்துவமனைகளிலும் இங்கு பயின்ற மாணவர்கள் ஏழை மக்களுக்கு விரும்பி  பணியாற்றுகின்றனர். கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பதை இந்த கல்லூரி அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதற்கு ஒரு கதை வச்சிருக்காங்க.
இந்தியாவில் முதல் நடமாடும் மருத்துவ சேவையை ஆரம்பித்தவர் ஐடா ஸ்கடர் தான். மாட்டு வண்டியில் மருந்து பொட்டலங்களுடன் புறப்பட்டு மரத்தடியில் அமர்ந்து கிராம மக்களுக்கு இலவச சிகிச்சையளித்து வருவது வழக்கம். "ஐடாவின் நடமாடும் மருத்துவ சேவை வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வந்திருக்குது. ஒருமுறை வேலூரிலிருந்து ஆற்காட்டுக்கு செல்லும் வழியில் இருக்கும் கேவி குப்பத்தில் மருத்துவம் பார்த்திருக்கிறார். அப்போது கடைசியாக நின்றவருக்கு கொடுக்க மருந்து இல்லாமல் போய்விட்டதாம். உடனே ஐடா . நான் திரும்பி வரும்போது இந்த வழியாகத்தான் வருவேன், ஆனால் மாட்டு வண்டியை ஆற்காட்டில் நிறுத்திவிட்டு மாலையில் ரயிலில்தான் வருவேன். ஆனா, இங்க ரயிலை நிறுத்த மாட்டாங்க. நீ இந்த இடத்தில் நின்றால் நான் ரயிலிருந்து மருந்து பொட்டலத்தை வீசுகிறேன். நீ அதை எடுத்துக்கொள் என்றிருக்கிறார். அதன்படியே ஐடா ரயிலில் வந்தபோது அந்த நபருக்கு மருந்து பொட்டலத்தை வீசினாராம். இந்த மனிதநேயமும், அக்கறையும்தான்  இன்று நம் மருத்துவர்களுக்கு தேவை. தன் தொழிலின்மீதான் இந்த அக்கறைதான் இன்று ஆசியாவின் இரண்டாவது மருத்துவமனையாய் சி.எம்.சி திகழ காரணம்.
வேலூர் சாலையில் ஓடிய முதல் மோட்டார் வண்டி ஐடா பயணம் செய்த கார்தான். இது தான் சி.எம்.சியின் முதல் அம்புலன்ஸ்சும்கூட. 1909 செப்டம்பர் 23ம்தேதி தான் வேலூரில் இது பயணத்தை தொடங்கியது. இந்தக் காரை ஸ்டார்ட் செய்யும்போது கழுத்து நெறிக்கப்படும் ஒரு மிருகத்தைப் போல சத்தம் எழுப்புமாம். கிராமங்களில் ஐடா வரும் காரைக் கண்டு மக்கள் பயந்து ஓடி இருக்கிறார்கள். பேய் வண்டி என்றும் பட்டப் பெயர் வச்சிருக்காங்க.  காலப்போக்கில் பயம் தெளிந்து, காரை தொட்டுப் பார்க்கவும், காரின் சீட்டில் உட்காரவும் வேலூர் மக்களுக்கு தைரியம் வந்திருக்கிறது. பிறகு ஒரு நாள் ஐடாவின் காரில் கொடூரமாக ஓசை எழுப்பும் கார் ஹாரனை சிலர் திருடிச் சென்றுவிட்டார்களாம்.
 உலகம் முழுவதுமிலிருந்து வந்து. வேலூரில் தங்கி சிகிச்சை மேற்கொண்டு நலமோடு திரும்புகின்றனர். .  இந்தியாவில் இதய வால்வுகளைச் சரிசெய்யும் சிகிச்சையும் இங்குதான் செய்யப்படுகிறது”. தகுந்த ஆவனங்களுடன் வரும் ஏழை நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுது.   கிராமப்புறங்களுக்கு நடமாடும் மருத்துவமனையும் இயக்கப்படுது.  மக்கள் சேவைக்காக குடும்பத்தையே அர்ப்பணித்திருந்த அந்த ஸ்கடர் குடும்பத்தின் கடைசி நபரான ஐடா ஸ்கடர் 24-05-1960ம் ஆண்டு மறைந்தார். திண்டிவனத்திலிருந்து தொடங்கிய அவரின் மருத்துவ சேவை இன்று உலகம் முழுக்க பேசப்படுது.

ஐடா ஸ்கடர் அவர்களின் அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும் இனிவரும் மருத்துவ மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.

நன்றியுடன்,
ராஜி.