Showing posts with label World News. Show all posts
Showing posts with label World News. Show all posts

Sunday, July 5, 2020

உலகளவில் 1 கோடி பேருக்கு கொரோனா தொற்று பரவல்

உலகளவில் 1 கோடி பேருக்கு கொரோனா தொற்று பரவல்

கொரோனா பெருந்தொற்று உலகளவில் 1 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் ஆபத்தான நிலையை எட்டி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள பல நாடுகளில் வைரஸ் பரவல் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், உலகின் சில நாடுகள் இப்போது இந்த நோய் மிக வேகமாகப் பரவுவதைக் காண முடிகிறது.
கொரோனா தொற்று முதன் முதலில் 10 லட்சம் பேருக்குப் பரவ மூன்று மாதங்கள் ஆனது. ஆனால், தற்போது வெறும் 8 நாட்களில் 10 லட்சம் பேருக்கு பரவியுள்ளது.
கொரோனா: சில நாடுகளில் தொற்று அதிகரிக்கவும், குறையவும் என்ன காரணம்?

எங்குத் தொற்று வேகமாகப் பரவுகிறது?

அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகள் தொற்று எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே உலகிலே அதிக கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ள அமெரிக்காவில் தற்போது இன்னும் தொற்று அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் 40,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் அரிசோனா, டெக்சாஸ், புளோரிடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவை எல்லாம் இரண்டாம் அலை தொற்று அல்ல. பொது முடக்கக் கட்டுப்பாடுகளை இந்த மாகாண அரசுகள் மிக விரைவிலே தளர்த்தியதால் ஏற்பட்ட விளைவு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
10 லட்சத்துக்கும் அதிகமான தொற்றுகளுடன் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலிலும், தொற்று அபாயகரமாக அதிகரித்து வருகிறது.
சாவோ பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ போன்ற பெரிய நகரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரேசிலில் உள்ள மற்ற பகுதிகளில் மிகக்குறைவாகவே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் இங்கு உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்தியாவில் சமீபத்தில் ஒரே நாளில் 15,000 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் மிகக்குறைவான அளவிலே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அங்கெல்லாம் அதிக பரிசோதனைகள் செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வளர்த்து வரும் நாடுகளில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

Tuesday, June 30, 2020

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு 6 மாதம் தடை !!

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு 6 மாதம் தடை !!

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்நாட்டின் அரசு விமானச் சேவை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் பணி புரியும் 262 விமான ஓட்டிகளின் உரிமம் சந்தேகத்துக்கு உரியவை என அந்நாட்டு அமைச்சகம் அறிவித்தது.
இது உலகெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆறு மாதங்களுக்குத் தடை விதித்துள்ளது.
இந்த முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிவித்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் இதையொட்டி ஐரோப்பா செல்லும் இந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகக் கூறி உள்ளார்.
Newstm.in
எச்சரிக்கை...! சீனாவிலிருந்து மற்றொரு புதிய கொடிய வைரஸ் பரவும் அபாயம்...

எச்சரிக்கை...! சீனாவிலிருந்து மற்றொரு புதிய கொடிய வைரஸ் பரவும் அபாயம்...

zee News:சீனாவின் வுஹானில் இருந்து கொரோனா வைரஸ் பரவிய சில மாதங்கள் கழித்து, தற்போது மற்றொரு புதிய கொடிய வைரஸ் சீனாவில் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ஒரு ஆய்வின்படி, சீனாவில் பன்றிகளில் காணப்படும் இந்த புதிய வைரஸ் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கும் தொற்றுநோயாக மாறும் என கூறப்படுகறிது. இது ஒரு 'தொற்று வைரஸ்' என நிரூபிக்கக்கூடும் என்பதால் உன்னிப்பாக கவனிக்கப்பட விஷயமாக தற்போது உருமாறியுள்ளது. இருப்பினும், இந்த வைரஸில் இருந்து உடனடி ஆபத்து எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வைரஸ் பன்றி வளர்ப்பு தொழிலாளர்களின் இரத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மனிதர்களில் வைரஸை கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆய்வாலர்கள்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக பன்றி வளர்ப்பு தொழிலில் பணிபுரிபவர்கள் இதுதொடர்பான சோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வு வைரஸின் அபாயத்தை விவரித்துள்ளது, இது மக்கள் அடர்த்தியான பகுதிகளில், குறிப்பாக சீனாவில் வாழக்கூடிய மக்களுக்கு பரவக்கூடும். பண்ணைகள், கால்நடை வளர்ப்பு மையங்கள், இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சி-மீன் சந்தைகளுக்கு அருகில் இருப்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் எனவும் வலியுறுத்துகிறது.

உலகளவில் கொரோனா தொற்றுநோயை பரப்பும் வைரஸ் தொடர்பாக பேசுகையில், இது தென்மேற்கு சீனாவில் குதிரை ஷூ போன்ற நாசி மட்டையில் தோன்றியதாக நம்பப்படுகிறது, மேலும் வுஹானில் உள்ள கடல் உணவு சந்தை வழியாக மனிதர்களுக்கு பரவியது எனவும், அங்கு தான் வைரஸ் முதல் அடையாளம் காணப்பட்டது எனவும் நம்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது சீனாவில் புதிதாக உருவாகி வரும் பன்றி காய்ச்சல் வைரஸ் உலக மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Sunday, June 28, 2020

 எல்லையை நோக்கி விரையும் இந்திய ஏவுகணைகள்

எல்லையை நோக்கி விரையும் இந்திய ஏவுகணைகள்


மீண்டும் ஆட்டம் காட்டும் சீனா - எல்லையை நோக்கி விரையும் இந்திய ஏவுகணைகள் :
Kathir News : ஒரு சில நொடிகளுக்குள் விமானத்தை பஸ்பமாக்கும்!
இந்திய-சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், சமாதான பேச்சுவார்த்தைகளையும் மீறி சீனப் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கிழக்கு லடாக் பகுதியை நோக்கி இந்தியா ஏவுகணைகளை விரைந்துள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீனப் படையினர் இடையே வெடித்த மோதலையடுத்து இரு நாடுகளும் எல்லையில் படையினரையும், போர்த்தளவாடங்களையும் தொடர்ச்சியாக குவித்து வருகின்றன.

அமைதி பேச்சுவார்த்தையை மீறி, சீன ராணுவம் எல்லையில் சுகோய்-30 ரக போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
இவை எல்லை மீறி அடிக்கடி இந்திய வான் பகுதிகளுக்கு அருகில் பறந்து செல்வதால் பதற்றம் நீடிக்கிறது. இதனை தொடர்ந்து சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று இராணுவத்தளபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக சீன விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இந்திய வான்பரப்புக்குள் வந்தால், அவற்றை ஒரு சில நொடிகளுக்குள் சுட்டு வீழ்த்தும் திறன் மிக்க ஏவுகணைகளை கிழக்கு லடாக் பகுதிக்கு அனுப்பியுள்ளது இந்திய ராணுவம். அதனோடு அந்நிய நாட்டு விமானங்களைக் கண்டறியும் ராடார், ஏவுகணைகளைச் செலுத்தும் வாகனம் ஆகியவற்றையும் அனுப்பியுள்ளது.

குழுமி நிற்கும் சீனப்படை; ரவுண்டு கட்டும் இந்தியப்படை!!

குழுமி நிற்கும் சீனப்படை; ரவுண்டு கட்டும் இந்தியப்படை!!

Webdunia :குழுமி நிற்கும் சீனப்படை; ரவுண்டு கட்டும் இந்தியப்படை!!
புதிய கட்டடங்களை காட்டும் புகைப்படம்
லடாக் எல்லை பகுதியில் இந்தியா - சீனா தனது படைகளை அதிகரித்துக்கொண்டே வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா- சீனா படைகள் லடாக் எல்லையில் மோதலில் ஈடுப்பட்டன. இதில் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இதற்கு சுமூக முடிவு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் லடாக் பகுதியில் சீனா தனது படைகளை அதிகரித்து வருகிறது. ஹெலிகாப்டர் இறங்குதளத்தை அமைத்து வருகிறது, இதனால், இந்தியாவும் தனது பங்கிறகு விமானப்படையை களமிறக்கியுள்ளது. சுமார் 40 விமானங்கள் வட்டமிட்டு வருகின்றனர்.
எல்லையில் நிலவும் அச்சுறுத்தலால் சீனாவுக்கு நிகராக இந்தியாவும் படைகள் இறக்கி பலத்தை அதிகரித்து வருகிறது.
கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் புதிய ராணுவ கட்டடங்கள்

கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் புதிய ராணுவ கட்டடங்கள்


இந்தியசீன.. பதற்றம்: கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் புதிய ராணுவ கட்டடங்கள்
புதிய கட்டடங்களை காட்டும் புகைப்படம்
புதிய கட்டடங்களை காட்டும் புகைப்படம்புதிய செயற்கைக்கோள் படம்   

BBC : இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஜூன் 15ஆம் தேதி இரவு மோதல் நடந்த பல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் சீனா புதிய கட்டுமானங்களை எழுப்பியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிகிறது.
பதுங்குக் குழிகள் கூடாரங்கள் ராணுவ தளவாடங்கள் தளங்களுக்கான சேமிப்பு கிடங்குகள் ஆகியவை புதிதாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது அந்த படங்கள் மூலம் தெரிய வருகிறது.
இந்த கட்டுமானங்கள் எவையும் சென்ற மாதம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில் இல்லை; அணு ஆயுதங்களை கொண்டுள்ள இந்த இரண்டு நாடுகளும் எல்லைப்பகுதியில் கட்டுமானங்கள் எழுப்புவதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியது சமீபத்திய பதற்றத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து நடந்த இருதரப்பு ராணுவ வீரர்கள் மோதலில் 20 இந்திய படையினர் கொல்லப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்தது.
சீன ராணுவத்தினரும் காயமடைந்தனர் அல்லது உயிரிழப்புகளை சந்தித்தனர் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால், இது குறித்த தகவல்கள் எதையும் சீன அரசு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை வீரர்களின் மோதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில் இந்த சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஜூன் 22ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மேக்சார் எனும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றால் எடுக்கப்பட்டவை.
கல்வான் நதியை நோக்கி சீனா கட்டியெழுப்பி உள்ளதாக கருதப்படும் இந்த கட்டடங்கள் ஜூன் மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இந்திய மற்றும் சீன தரப்புகள் இது குறித்து எந்த கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சீன எல்லையில் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ள படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்திய-சீன எல்லையில் பதற்றம் உண்டானதைத் தொடர்ந்து தங்கள் படைகளை நிலைநிறுத்திய இடங்களிலிருந்து தத்தமது படையினரை பின்வாங்க செய்வதாக உயர்மட்ட ராணுவ பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்ட பின்பு, பதற்றம் தணியும் என்று கருதப்பட்ட சூழலில் ஜூன் 15ம் தேதி மற்றும் ஜூன் 16-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் மோதிக்கொண்டனர்.
இந்த மோதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையே உருவாகியுள்ள பதற்றத்தை தணிக்க விரும்புவதாக இரு நாட்டு அரசுகளும் பொதுவெளியில் தெரிவித்துள்ளன.
ஜூன் 6ஆம் தேதி மூத்த ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டதைப் போல பதற்றத்தை தணிக்கும் நோக்கில் படையினரை பின்வாங்க செய்யவும் இருதரப்பினரும் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
புதிதாக வெளியாகியுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களில் என்ன தெரிகிறது?
கல்வான் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய சீன ராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மெய்யான கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய பகுதிக்குள் 1.5 கிலோமீட்டர் தொலைவில் இது அமைக்கப்பட்டுள்ளது,” என்று இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு விவகாரங்களுக்கான நிபுணர் அஜய் சுக்லா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
ராணுவ அதிகாரிகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்த சமயம் மற்றும் ஜூன் 15 அன்று நடந்த இருதரப்பு மோதல் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவின் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மே மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம்படத்தின் காப்புரிமை MAXAR TECHNOLOGIES/REUTERS
Image caption மே மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம்
மே மாதம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில் இத்தகைய கட்டுமானங்கள் எதையும் காண முடியவில்லை.
முன்னாள் இந்திய வெளியுறவு அதிகாரிகள் விவகாரங்களில் இந்த வருமான பி. ஸ்டோப்தான் இந்தக் கட்டுமானங்கள் கவலையளிப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்திய அரசு இது குறித்து படங்களையோ அறிக்கையோ எதையும் வெளியிடவில்லை. அதனால் இது குறித்து பேசுவது மிகவும் கடினமானது. ஆனால் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள படங்களை வைத்துப் பார்க்கும்போது சீனத் தரப்பு உள்கட்டமைப்பு வசதிகளை கட்டி எழுப்பியுள்ளது தெரிகிறது என்றும் எல்லைப் பகுதியில் இருந்து சீனா இன்னும் பில் வாங்கவில்லை என்றும் தெரிகிறது என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்திய சீன எல்லைப் பகுதியில் இன்னும் பதற்றமான சூழல் நிலவுவதாக அவர் தெரிவித்தார் .
இந்திய ராணுவத் தளபதியான ஜெனரல் எம்.எம் நர்வானே இந்திய-சீன எல்லைப் பகுதிகளுக்கு, புதனன்று பயணங்களை மேற்கொண்டு அங்கு ராணுவத்தின் தயார் நிலை குறித்து மேற்பார்வையிட்டார் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமையும் அவர், எல்லையில் சில இடங்களுக்கு செல்ல உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.