Thursday, July 9, 2020

4 மாதமாக நரக வேதனை.. இருட்டு அறையில் சித்ரவதை.. போலீசும், டாக்டரும் செய்த கொடூரம்.!!

4 மாதமாக நரக வேதனை.. இருட்டு அறையில் சித்ரவதை.. போலீசும், டாக்டரும் செய்த கொடூரம்.!!

ஒடிஷா மாநிலத்தில் உள்ள பிரமித்தாராபூர் பகுதியில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி 14 வயது சிறுமி அங்கு நடைபெற்ற கண்காட்சியை காண வந்துள்ளார். இந்நிலையில், அன்று இரவு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் ஊருக்கு செல்ல வழியில்லாமல் நின்ற சிறுமியை கவனித்த அப்பகுதி இன்ஸ்பெக்ட்டர், பாதுகாப்பு தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த நான்கு மாதமாக சிறுமியை மறைமுகமாக வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனால் சிறுமி தற்போது கர்ப்பமடையவே, இதனை அறிந்த காவல் அதிகாரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அழைத்து சென்று தனது பதவியை வைத்து கருக்கலைப்பு செய்துள்ளார். கருக்கலைப்பு செய்த பின்னர் சிறுமி எப்படியோ தப்பித்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
அங்கு தனது பெற்றோர்களிடம் நடந்ததை கூறவே, பெற்றோர்கள் அங்குள்ள எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளனர். எஸ்.பியின் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கருக்கலைப்பு செய்த அரசு டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Monday, July 6, 2020

ஐபிஎல் 2020 தொடரை நடத்த முன்வந்த 3 ஆவது நாடு!

ஐபிஎல் 2020 தொடரை நடத்த முன்வந்த 3 ஆவது நாடு!

கரோனா வைரஸ் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்த முடியாமல் போனால் தொடரை தங்கள் நாட்டில் நடத்த நியூசிலாந்து முன்வந்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை தங்கள் நாட்டில் தொடரை நடத்த ஆர்வம் காட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையை ஒத்திவைக்கும் அறிவிப்பு வந்தால் உடனடியாக ஐபிஎல் தொடர் குறித்த அறிவிப்பும் வெளிவந்துவிடும்.
பி.சி.சி.ஐ ஏற்கனவே ஐ.பி.எல் தொடரை செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்தவே பிசிசிஐ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
"இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்துவது முதல் தேர்வாக இருக்கம், ஆனால் சூழ்நிலை பாதுகாப்பாக இல்லாவிட்டால், அடுத்த தேர்வு வெளிநாடாகத்தான் இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கைக்குப் பிறகு, நியூசிலாந்து ஐபிஎல் போட்டியை நடத்த முன்வந்துள்ளது" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், "நாங்கள் அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசிப்போம். வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதில் எந்த சமரசமும் இருக்காது" என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் இதற்கு முன்னதாக வெளிநாட்டில் நடந்துள்ளது. 2009 ஆம் ஆண்டின் முழு பதிப்பும் தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இதேபோல் 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சில போட்டிகள் நடந்தது.
ஒருவேளை ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் நடந்தால், போட்டியை நடத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தான் முன்னணியில் உள்ளது.

Sunday, July 5, 2020

உலகளவில் 1 கோடி பேருக்கு கொரோனா தொற்று பரவல்

உலகளவில் 1 கோடி பேருக்கு கொரோனா தொற்று பரவல்

கொரோனா பெருந்தொற்று உலகளவில் 1 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் ஆபத்தான நிலையை எட்டி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள பல நாடுகளில் வைரஸ் பரவல் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், உலகின் சில நாடுகள் இப்போது இந்த நோய் மிக வேகமாகப் பரவுவதைக் காண முடிகிறது.
கொரோனா தொற்று முதன் முதலில் 10 லட்சம் பேருக்குப் பரவ மூன்று மாதங்கள் ஆனது. ஆனால், தற்போது வெறும் 8 நாட்களில் 10 லட்சம் பேருக்கு பரவியுள்ளது.
கொரோனா: சில நாடுகளில் தொற்று அதிகரிக்கவும், குறையவும் என்ன காரணம்?

எங்குத் தொற்று வேகமாகப் பரவுகிறது?

அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகள் தொற்று எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே உலகிலே அதிக கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ள அமெரிக்காவில் தற்போது இன்னும் தொற்று அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் 40,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் அரிசோனா, டெக்சாஸ், புளோரிடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவை எல்லாம் இரண்டாம் அலை தொற்று அல்ல. பொது முடக்கக் கட்டுப்பாடுகளை இந்த மாகாண அரசுகள் மிக விரைவிலே தளர்த்தியதால் ஏற்பட்ட விளைவு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
10 லட்சத்துக்கும் அதிகமான தொற்றுகளுடன் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலிலும், தொற்று அபாயகரமாக அதிகரித்து வருகிறது.
சாவோ பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ போன்ற பெரிய நகரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரேசிலில் உள்ள மற்ற பகுதிகளில் மிகக்குறைவாகவே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் இங்கு உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்தியாவில் சமீபத்தில் ஒரே நாளில் 15,000 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் மிகக்குறைவான அளவிலே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அங்கெல்லாம் அதிக பரிசோதனைகள் செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வளர்த்து வரும் நாடுகளில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

Saturday, July 4, 2020

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் ஜூன் 4 ம் தேதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பாதையில் போர்நிறுத்தத்தை மீறியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் ஜூன் 4 ம் தேதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பாதையில் போர்நிறுத்தத்தை மீறியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் ஜூன் 4 ம் தேதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பாதையில் போர்நிறுத்தத்தை மீறியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இரவு 7.45 மணியளவில் மோட்டார் ஷெல் மற்றும் சிறிய கை துப்பாக்கிச் சூடு எல்லையைத் தாண்டி தொடங்கியது என்று அவர் கூறினார். டெக்வார் துறையில் மற்றும் இந்திய இராணுவம் ஒரு பொருத்தமான பதிலை அளித்தது. கடைசியாக அறிக்கைகள் வந்தபோது எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடந்து வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்திய தரப்பில் எந்த விபத்து ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை.

வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்

வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்

ஹனோய்: ஊரடங்கு முடிந்த நிலையில், வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறக்கப்பட்டது. சாப்பிடும் தட்டு முதல் டாய்லெட் வரை எல்லாமே தங்க முலாம் பூசப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தியதையடுத்து வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் புதியதாக திறக்கப்பட்டது. விருந்தினர்களை கவர்வதற்காக தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள் மற்றும் கழிப்பறைகள், சுவர்கள் என, எல்லாமே ஒரே தங்கத்தால் ஆன ஓட்டல் போல் காட்சியளிக்கிறது....
வீடியோவை வெளியிட்டு எதன் மீது தனக்கு காதல் என்பதை வெளிப்படுத்திய கோலி..!

வீடியோவை வெளியிட்டு எதன் மீது தனக்கு காதல் என்பதை வெளிப்படுத்திய கோலி..!


இந்திய கிரிக்கெட் அணியில் பிட்னஸில் எப்போதும் அதிக கவனம் செலுத்துவது கேப்டன் விராட் கோலி என்பதை யாராலும் மறுக்க முடியாது. பலமுறை பேட்டிகளில் தன்னுடைய சிறந்த ஆட்டங்களுக்கு காரணமே, எனது உடல் பிட்னஸ் என்றும், வீரர்களுக்கு இது மிகவும் அவசியம் என கூறியுள்ளார்.
கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு சமயங்களில் வீரர்கள் தங்களின் வீடுகளில் இருந்து கொண்டு, ஆன்லைன் சாட்டில் ஈடுபட்டிக் கொண்டிருந்த வேளையில், விராட் கோலி தனது பிட்னஸில்தான் அதிக கவனம் செலுத்தினார். அவர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு வீடியோக்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், அதிக எடையுடன் பளுதூக்கும் வீடியோவை விராட் கோலி வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவுடன், 'தினமும் உடற்பயிற்சி செய்வதில், தனக்கு பிடித்தமான பளுதூக்குதலை தேர்வு செய்து, அதனை செய்வேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்டும் ராஜஸ்தான்

உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்டும் ராஜஸ்தான்


உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் மொதாரா கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1.10 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கலாம். அதன்பின் ஆஸ்திரேலியாவில் 1.02 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய மெல்போர்ன் மைதானம் உள்ளது.
இந்நிலையில் 75 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்ட இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சோன்ப் கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தில் சுமார் 350 கோடி ரூபாயில் இரண்டு கட்டமாக கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது.
வேலை தொடங்குவதில் இருந்து இரண்டு வருடத்திற்குள் மைதானம் தயாராகி விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பயிற்சி மைதானங்கள் அமைக்கப்படும். இரண்டையும் ரஞ்சி கோப்பை போட்டிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் 30 வலைப்பயிற்சி பகுதியும், 250 பேர் அமரும் வகையில் பத்திரிகையாளர்கள் அறையும் கட்டப்பட இருக்கிறது.
கல்லூரி தேர்வுகளை நடத்தலாமா? வேண்டாமா? ஆராய குழு அமைப்பு

கல்லூரி தேர்வுகளை நடத்தலாமா? வேண்டாமா? ஆராய குழு அமைப்பு


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ.) 62-வது கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்கலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ அறிவித்தது. பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக அங்கீகாரத்தை ஜூலை 15-ந்தேதிக்குள் வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கல்லூரி தேர்வுகளை நடத்துவது குறித்து ஆராய தமிழக அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உள்ளிட்ட 11 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். கொரோனா பொது முடக்கத்தால் தடை செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது பற்றி இக்குழு ஆராய உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்கள்படி, தேர்வுகளை நடத்துவது குறித்து இந்தக் குழுவினர் அரசுக்கு பரிந்துரை வழங்க உள்ளனர்.