Showing posts with label SPORTS. Show all posts
Showing posts with label SPORTS. Show all posts

Monday, July 6, 2020

ஐபிஎல் 2020 தொடரை நடத்த முன்வந்த 3 ஆவது நாடு!

ஐபிஎல் 2020 தொடரை நடத்த முன்வந்த 3 ஆவது நாடு!

கரோனா வைரஸ் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்த முடியாமல் போனால் தொடரை தங்கள் நாட்டில் நடத்த நியூசிலாந்து முன்வந்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை தங்கள் நாட்டில் தொடரை நடத்த ஆர்வம் காட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையை ஒத்திவைக்கும் அறிவிப்பு வந்தால் உடனடியாக ஐபிஎல் தொடர் குறித்த அறிவிப்பும் வெளிவந்துவிடும்.
பி.சி.சி.ஐ ஏற்கனவே ஐ.பி.எல் தொடரை செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்தவே பிசிசிஐ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
"இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்துவது முதல் தேர்வாக இருக்கம், ஆனால் சூழ்நிலை பாதுகாப்பாக இல்லாவிட்டால், அடுத்த தேர்வு வெளிநாடாகத்தான் இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கைக்குப் பிறகு, நியூசிலாந்து ஐபிஎல் போட்டியை நடத்த முன்வந்துள்ளது" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், "நாங்கள் அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசிப்போம். வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதில் எந்த சமரசமும் இருக்காது" என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் இதற்கு முன்னதாக வெளிநாட்டில் நடந்துள்ளது. 2009 ஆம் ஆண்டின் முழு பதிப்பும் தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இதேபோல் 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சில போட்டிகள் நடந்தது.
ஒருவேளை ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் நடந்தால், போட்டியை நடத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தான் முன்னணியில் உள்ளது.

Saturday, July 4, 2020

வீடியோவை வெளியிட்டு எதன் மீது தனக்கு காதல் என்பதை வெளிப்படுத்திய கோலி..!

வீடியோவை வெளியிட்டு எதன் மீது தனக்கு காதல் என்பதை வெளிப்படுத்திய கோலி..!


இந்திய கிரிக்கெட் அணியில் பிட்னஸில் எப்போதும் அதிக கவனம் செலுத்துவது கேப்டன் விராட் கோலி என்பதை யாராலும் மறுக்க முடியாது. பலமுறை பேட்டிகளில் தன்னுடைய சிறந்த ஆட்டங்களுக்கு காரணமே, எனது உடல் பிட்னஸ் என்றும், வீரர்களுக்கு இது மிகவும் அவசியம் என கூறியுள்ளார்.
கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு சமயங்களில் வீரர்கள் தங்களின் வீடுகளில் இருந்து கொண்டு, ஆன்லைன் சாட்டில் ஈடுபட்டிக் கொண்டிருந்த வேளையில், விராட் கோலி தனது பிட்னஸில்தான் அதிக கவனம் செலுத்தினார். அவர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு வீடியோக்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், அதிக எடையுடன் பளுதூக்கும் வீடியோவை விராட் கோலி வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவுடன், 'தினமும் உடற்பயிற்சி செய்வதில், தனக்கு பிடித்தமான பளுதூக்குதலை தேர்வு செய்து, அதனை செய்வேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்டும் ராஜஸ்தான்

உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்டும் ராஜஸ்தான்


உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் மொதாரா கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1.10 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கலாம். அதன்பின் ஆஸ்திரேலியாவில் 1.02 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய மெல்போர்ன் மைதானம் உள்ளது.
இந்நிலையில் 75 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்ட இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சோன்ப் கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தில் சுமார் 350 கோடி ரூபாயில் இரண்டு கட்டமாக கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது.
வேலை தொடங்குவதில் இருந்து இரண்டு வருடத்திற்குள் மைதானம் தயாராகி விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பயிற்சி மைதானங்கள் அமைக்கப்படும். இரண்டையும் ரஞ்சி கோப்பை போட்டிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் 30 வலைப்பயிற்சி பகுதியும், 250 பேர் அமரும் வகையில் பத்திரிகையாளர்கள் அறையும் கட்டப்பட இருக்கிறது.
“என்னை ஏன் விராட் கோலியோட ஒப்பிடுறீங்க..?”- கொதித்த பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன்

“என்னை ஏன் விராட் கோலியோட ஒப்பிடுறீங்க..?”- கொதித்த பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்பவர் பாபர் அசாம். பாகிஸ்தான் அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டனாகவும் அவர் செயல்பட்டு வருகிறார். அவரின் ஆட்டத் திறன் மற்றும் பேட்டிங் ஸ்டைலை வைத்துப் பலரும் அவரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியோடு ஒப்பிடுவது வழக்கம். இப்படி பலர் ஒப்பிட்டு வருவது குறித்துப் பேசியுள்ள அசாம், “என்னை யாரோடாவது ஒப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்களோடு ஒப்பிடுங்கள். விராட் கோலியோடு மட்டுமே ஒப்பிட வேண்டாம். எங்கள் நாட்டிலும் ஜாவத் மியாண்டட், யூனிஸ் கான், இன்சமாம்-உல்-ஹக் உள்ளிட்ட பல லெஜண்டுகள் உள்ளனர். இதைப் போன்ற ஜாம்பவான்களோடு என்னை ஒப்பிட்டால், அதை நான் மிகவும் விரும்புவேன். அது எனக்கு இன்னும் பெருமையாக இருக்கும்” என்று வெளிப்படையாக பேசியுள்ளார். 
Babar Azam is very Close to Being in the Same Class as Virat Kohli" Says  Misbah Ul Haq - EssentiallySports
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் பாபர் அசாம். ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் கோலி. 
25 வயதாகும் அசாம், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் 50 பேட்டிங் சராசரிக்கு மேல் வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 45-க்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து சென்றுள்ள 20 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாமும் உள்ளார். பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரானது எப்போது தொடங்கும் என்பது குறித்து இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. 
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட்டிற்கு பிரேக் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரும் 8 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 
 

Tuesday, June 30, 2020

இது இந்தியன் பிரீமியர் லீக் தான், சீனா பிரீமியர் லீக் அல்ல; சீன ஸ்பான்சரை அகற்றுங்கள்: நெஸ் வாடியா எழுச்சிப் பேச்சு

இது இந்தியன் பிரீமியர் லீக் தான், சீனா பிரீமியர் லீக் அல்ல; சீன ஸ்பான்சரை அகற்றுங்கள்: நெஸ் வாடியா எழுச்சிப் பேச்சு

இந்தியன்பிரீமியர் லீக் ஸ்பான்சராக சீன நிறுவனம் நீடிக்கக் கூடாது, மெதுவே அதன் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து வெளியே வர வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததையடுத்து சீனா மீதான கோபம் பெரிய அளவில் இந்திய மக்களிடையே பரவி வருகிறது. சீனப் பொருட்களை, சீன நிறுவனங்களைப் புறக்கணிக்குமாறு குரல்கள் வலுத்து வருகின்றன.
மோடி தலைமையிலான மத்திய அரசு 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் விவோ ஐபிஎல் என்று ஐபிஎல் அழைக்கப்படுகிறது, இது சீன நிறுவனம், இதன் ஸ்பான்சரை இழக்க முடியாது என்று பிசிசிஐ பொருளாளர் ஏற்கெனவே கூறிய நிலையில் மீண்டும் அந்த பேச்சு எழுந்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் உரிமையாளர் நெஸ் வாடியா கூறும்போது, 'ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து சீன ஸ்பான்ஷர்ஷிப்பை அகற்ற வேண்டும். நாட்டுக்காக இதைச் செய்ய வேண்டும். நாடுதான் முதலில் பணம் இரண்டாவதுதான். இது இந்தியன் பிரீமியர் லீக், சீனா பிரீமியர் லீக் அல்ல. இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
தொடக்கத்தில் புதிய ஸ்பான்சர் கிடைப்பது கடினமே, ஆனால் போதிய இந்திய ஸ்பான்சர்கள் இருக்கின்றனர் சீனாவுக்கு மாற்றாக. நம் நாடு, நம் அரசு, நம் ராணுவ வீரர்களுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும். அவர்கள் நமக்காக உயிரைப்பணயம் வைக்கிறார்கள்.
இது தொடர்பாக அரசின் அறிவுறுத்தலுக்காகக் காத்திருத்தல் கூடாது, நமக்கே பொறுப்பு உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் நாம் தேசத்துடன் ஒன்றாக நிற்க வேண்டும்.
நான் பிசிசிஐ தலைவராக இருந்தால் இந்திய ஸ்பான்சர்களுக்காக அழைப்பு விடுத்திருப்பேன். இந்திய நிறுவனங்கள் ஐபிஎல் ஸ்பான்சருக்கு முன் வர வேண்டும்.
அதே போல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் மட்டுமல்ல அணிகளையும் சீன ஸ்பான்சர்ஷிப் கவர்ந்து வருகிறது அணிகளுக்கும் கால அவகாசம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சீன நிறுவனங்களை அகற்ற வேண்டும். நான் ஏற்கெனவே கூறியது போல் நிறைய இந்திய நிறுவனங்கள் உள்ளன.
எனக்கு தனிப்பட்ட முறையில் சீன பொருட்கள் பிடிக்காது ஏனெனில் அவை தரமற்றவை. மேக்கிங் இந்தியன் பையிங் இந்தியன் என்பதில் கவனம் வேண்டும். பெரிய அளவில் பொருட்களைக் குவித்து சீன நிறுவனங்கள் உலகையே மூச்சுத்திணறடித்து வருகின்றன. இந்தியாவை உற்பத்திக் கூடமாக மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும். சீனப் பொருட்களைத் தடுக்காவிட்டால் இந்தியத் தொழிற்துறை செத்துப்போய்விடும்' என்ற நெஸ் வாடியா, சீன செயலிகள் தடை குறித்து, 'இந்தியா தன் ஆட்டத்தை சரியாக ஆடினால் நாடு அது ஆசைப்படும் சூப்பர்பவராக மாறும், என்றார்.