Saturday, June 27, 2020

கிளி , லாங்குர் வளர்ப்பதற்குக் இனி அனுமதியில்லை.

கிளி மற்றும் லங்கூர் வளர்த்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
கிளி , லாங்குர் வளர்ப்பதற்குக் இனி அனுமதியில்லை..கான்பூர் வனச்சரகம் உத்தரவு .
.
கிளி மற்றும் லங்கூர் வளர்த்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!zeenews.india.com/tami/: செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் உண்டு.  நாய், பூனை, கிளி மட்டுமல்ல, யானை போன்ற விலங்குகளையும் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாற்றிக் கொள்ளும் மனிதர்களை நாம் பார்த்திருக்கலாம்.
தற்போது காலம் மாறிவிட்டது.  முதலில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது இயல்பான ஒன்றாக இருந்தது.  அதற்கு பெரிய அளவில் செலவாகாது.  ஆனால் இந்த விருப்பம் தற்போது மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது.
சிலருக்கு கிளிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் இப்போது இந்த பொழுதுபோக்குகள் மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது.  கான்பூர் வனச்சரகம் லங்கூர் மற்றும் கிளி வளர்ப்பை தடை செய்துள்ளது. இந்தத் தடையை மீறி லங்கூர் மற்றும் கிளியை வளர்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


லங்கூர் மற்றும் கிளியை பிடித்து கூண்டில் அடைப்பது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். எனவே, இந்த பிராணிகளை பிடிப்பவர்களும், வளர்ப்பவர்களும் 3 ஆண்டுகள் சிறைதண்டனையோ அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதமோ செலுத்த வேண்டும். சில சமயங்களில், சிறை மற்றும் அபராதம் இரண்டுமே விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கான்பூரின் சமூக வனவியல் பிரிவு அரவிந்த்குமார் யாதவ் பிரதேச இயக்குநர் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார். உத்தரவின்படி, எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ லாங்கூர் அல்லது கிளியை சிறைபிடித்து வைத்திருந்தால், அவர்கள் மீது 1972ஆம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கபப்டும்.

குற்றச்சாடு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் அல்லது 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் வசூலிக்கப்படலாம். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், குற்றவாளிக்கு சிறை மற்றும் அபராதம் இரண்டுமே விதிக்க முடியும்.
கிளிகளில் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. கிளிகளின் சிறப்ம்சம் அவற்றின் வளைந்த அலகு ஆகும்.  அதை நாம் கிளிமூக்கு என்று அழைக்கிறோம். கொண்டன. ஆஸ்திரேலியாவிலும், தென் அமெரிக்காவிலுமே மிகவும் அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு மூக்குக் கொண்ட கிளியாகும்.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: