Showing posts with label TRENDING NEWS. Show all posts
Showing posts with label TRENDING NEWS. Show all posts

Thursday, July 2, 2020

இன்று திருமணம் மறுநாள் தற்கொலை! காரணம் என்ன?

இன்று திருமணம் மறுநாள் தற்கொலை! காரணம் என்ன?

சமீப காலங்களில் தற்கொலைகளின் (Suicide) எண்ணிக்கை அதிகரித்துகொண்டு வருவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிறு தோல்விகளையும் ஏமாற்றங்களையும் கூட தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு மனித மனம் நலிந்து விட்டதா என்ற கேள்வி எழுகிறது. உத்திர பிரதேசத்திலிருந்து வந்துள்ள ஒரு செய்தி இது குறித்த அச்சத்தை அதிகரிப்பதோடு பல கேள்விகளையும் எழுப்புகிறது.
உத்திரபிரதேசத்தின் (UP) முஸஃபர்நகரிலிருந்து (Muzafarnagar) அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளி வந்துள்ளது. இங்கு ஜூன் 29 அன்று, சச்சின் மற்றும் நேஹாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு மணமகன் வீட்டிற்கு வந்த மணப்பெண் அடுத்த நாளே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி அந்தப் பகுதி முழுவதும் தீ போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்ணின் அறையில் இருந்த கண்ணாடியில் தற்கொலைக்கான குறிப்பு ஒன்றையும் காவல்துறை கண்டறிந்துள்ளது.
இந்த விவகாரம் குடேசரா கிராமத்தில் நடந்துள்ளது. சர்தாலா பகுதியைச் சேர்ந்த இந்த கிராமத்தில், சச்சின் சைனி டிவி பழுது பார்க்கும் கடையை வைத்திருந்தார். இவரது திருமணம் ஜூன் 29 அன்று ஷாம்லியின் (Shamli) ஜின்ஜானா தர்கத் நாகௌர் கிராமத்தை சேர்ந்த நேஹாவுடன் நடந்தது.
கொரோனா (Corona) நோய்த்தொற்றின் காரணமாக, இவர்களது திருமணத்திற்கு, மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜுன் 29 அன்று திருமணம் நடந்தது. ஜூன் 30 அன்று மணப்பெண் உட்பட மணமகன் வீட்டில் அனைவரும் அவர்களது வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்தவுடன் திருமணத்தின் மற்ற சடங்குகளும் நடத்தப்பட்டன.
ஜூலை 1 அன்று தனது காலில் வலி உள்ளதாக நேஹா வீட்டினரிடம் தெரிவித்தார். அதன் பிறகு அவர் தனது அறைக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டார். தனது அறைக்குள் சென்றவுடன் நேஹா தனது தந்தைக்கு ஃபோன் செய்ததாகவும், ஆனால் அதைப் பற்றி வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியாதென்றும் கூறப்படுகிறது. நேஹா தன் தந்தையிடம் தன் கணவன் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.
அன்று மதியம் நேஹாவின் தந்தை நேஹாவின் புகுந்த வீட்டிற்கு வந்துள்ளார். தன்னை நேஹா அழைத்ததாக அவர் கூறினார். நேஹா தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த அவர்களுக்கு நேஹாவின் தந்தையின் கூற்று ஆச்சரியத்தை அளிக்கிறது. பின்னர் அனைவரும் நேஹாவை அழைத்தும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
எவ்வளவு அடித்தும் கதவு திறக்கப்படாமல் போகவே, சச்சின் வீட்டினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின்விசிறியிலிருந்து நேஹாவின் சடலம் தொங்குவதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. தான் தன் விருப்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதாகவும், இதில் தன் புகுந்த வீட்டாருக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் நேஹா அறையில் இருந்த கண்ணாடியில் அவர் எழுதி இருந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து போலீஸ் மேலும் விசாரணை செய்து வருகிறது.
மகிழ்ச்சியாக திருமணம் செய்துகொண்டு கணவன் வீட்டிற்கு வந்த பெண் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன என்ற கேள்வியே அனைவரது மனங்களிலும் மேலோங்கி உள்ளது. குழந்தைகள், இளைஞர்கள் என அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் அனைவரின் தலையாய கடமையாகும். தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என்ற கருத்து ஆழமாக அனைவரது மனங்களிலும் பதிக்கப்பட வேண்டும்.
அதிர்ச்சி !! 7 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை !! 27 வயது இளைஞர் கைது..

அதிர்ச்சி !! 7 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை !! 27 வயது இளைஞர் கைது..

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி பகுதியை சார்ந்த சிறுமி ஜெயப்பிரியா (வயது 7). இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இந்நிலையில், சிறுமி சம்பவத்தன்று மாயமாகியுள்ளார்.
இவரை காணாது தேடியலைந்த பெற்றோர் சிறுமி காணாததால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.


இந்த நிலையில், சிறுமி அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் உடலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளமும், அவரது ஆடைகள் கலைந்தும் இருந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,
சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு இணையத்தில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
காவல் துறையினரின் விசாரணையில், இதே பகுதியை சார்ந்த 27 வயது இளைஞரை சந்தேகத்தின் கீழ் கொண்டு வந்து விசாரணை செய்தனர். இதில், சிறுமியை 27 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
Newstm.in

Tuesday, June 30, 2020

நீதிமன்ற விசாரணை காரணமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி ஏஎஸ்பி, டிஎஸ்பிக்கு உடனடி பதவி

நீதிமன்ற விசாரணை காரணமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி ஏஎஸ்பி, டிஎஸ்பிக்கு உடனடி பதவி

சாத்தான்குளம் தந்தை மகன் மரண விவகாரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணையின்போது அவர் மிரட்டப்பட்டதாக எழுந்த புகாரில் மாற்றப்பட்ட தூத்துக்குடி ஏஎஸ்பி, டிஎஸ்பி இருவருக்கும் 12 மணி நேரத்தில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தியா முழுவதும் பல தரப்பிலும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய அளவில் ராகுல் காந்தி முதல் சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் இவ்விவகாரத்தில் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய கோரிக்கை வலுத்துவந்தது.
இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்ற குற்றவியல் நடுவர் பாரதிதாசனை மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து எஸ்.பி.பாலகோபாலன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
எஸ்.பி. அருண்பாலகோபாலன் இந்தச் சம்பவத்தைக் கையாண்ட விதம் குறித்து விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் எஸ்.பி. அருண்பாலகோபாலன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி எஸ்.பி.யாக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி குமார் மற்றும் டிஎஸ்பி பிரதாபனுக்கு உடனடியாக பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி அலுவலகம் பிறப்பித்துள்ளது.
1. தூத்துக்குடி ஏஎஸ்பியாக பதவி வகித்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட குமார் நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.தூத்துக்குடி டிஎஸ்பியாக இருந்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிரதாபன் புதுகோட்டை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3.நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் கூடுதல் டிஎஸ்பி கோபி தூத்துக்குடி மாவட்ட பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. கள்ளக்குறிச்சி சப் டிவிஷன் டிஎஸ்பி ராமநாதன் சாத்தான்குளம் சப்டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண விவகாரத்தில் நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வரும் நிலையில் அகில இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கமும் கண்டனம் தெரிவித்து உரிய விசாரணை நடத்தி நியாயம் கிடைக்கச் செய்யவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்ற குற்றவியல் நடுவர் பாரதிதாசனை மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து எஸ்.பி. பாலகோபாலன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகாரில் நடவடிக்கை எடுக்க மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வட்டாட்சியர் செந்தூர்ராஜன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வு காவல்துறையில் பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அகில இந்திய அளவில் இந்த வழக்கு போகும் தன்மையை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் அதனால் பலரும் இதன் மீது கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அகில இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
'போலீஸ் காவலில் உள்ள குடிமக்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தின் வழக்கை விரைவாகவும் நியாயமாகவும் விசாரிக்க விசாரணை நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்'.
இவ்வாறு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பென்னிக்ஸின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்த காவலர்கள்! உடற்கூராய்வில் தகவல்

பென்னிக்ஸின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்த காவலர்கள்! உடற்கூராய்வில் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதில் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த அறிக்கையில், இருவரின் உடலில் அதிக அளவு காயம் இருந்தது. இதனால் சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு முகாந்திரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், காவலர்கள் கொடுத்த அறிக்கைக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு மாறுபாடுகள் அதிகமாக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம். டிஜிபியின் உத்தரவிற்காக காத்திருக்காமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை கையிலெடுக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு சமர்பித்திருக்கும் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அதில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக்காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டதையும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பென்னிக்ஸின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்ததற்கான அடையாளங்களும் உடற்கூராய்வில் தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், பென்னிக்ஸின் போர்வையில் ரத்தக்கறை படிந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.