மின்னம்பலம் : நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை நிறுத்திவைக்க வேண்டுமென முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சுமார் ரூ. 10,000 கோடி அளவுக்கு தமிழகம் முழுவதும் டெண்டர் விடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புகளை செய்து பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் திட்டமிடப்பட்டுள்ள டெண்டர்கள் குறித்து பல விமர்சனங்களும், கேள்விகளும் எழும்பியுள்ளன. ஏற்கனவே, சென்னை, உயர்நீதிமன்றத்திலும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதனை நிறுத்திவைக்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதுதொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், “தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் மட்டும் 833 கி.மீ.க்கு ரூ. 1827 கோடி திட்டம் மதிப்பீடு உள்பட டெண்டருக்கான அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் (பி.பி.எம்.சி.) ஒரு கி.மீ.க்கு ரூ. 2.25 கோடி மதிப்பீடு செலவில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இதே போல பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் (பி.பி.எம்.சி.) திட்டமிடப்பட்ட சாலைகளுக்கு சராரியாக ஒரு கி.மீ.க்கு ரூ. 1.30 கோடி செலவுக்கு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒரு கி.மீ.க்கு ரூ. 2.25 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது அதீத மதிப்பீடாக உள்ளது. இதற்கான காரணங்கள் வெளிப்படையாக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா நோய்த் தொற்று மிகவும் தீவிரமடைந்து வருவதாகவும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும், இதை எதிர்த்து ஒரு தீவிரமான போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறிய பாலகிருஷ்ணன், “ஏற்கனவே தமிழக அரசின் நிதி நிலைமை மிகுந்த நெருக்கடியில் உள்ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி ரூ. 4.53 லட்சம் கோடி மாநிலத்திற்கு கடன் சுமை உள்ளது. நடப்பாண்டு நிதிப்பற்றாக்குறை ரூ. 43 ஆயிரம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு மாநிலத்தின் சொந்த வருவாய் பெருமளவு பாதித்துள்ளது. மாண்புமிகு. முதலமைச்சரின் அறிவிப்பின் படி நடப்பாண்டில் கொரோனாவால் ரூ. 85 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.” என்றும் கூறியுள்ளார். இது மட்டுமின்றி மாநிலத்தின் வருவாய் குறைந்து வரும் சூழலில் திட்டமிடாத பல செலவுகள் அதிகமாகிக் கொண்டுள்ளன. குறிப்பாக, கொரோனா நோய்த் தொற்றுக்காக மருத்துவம், சுகாதாரப் பணிகளுக்காக பல ஆயிரம் கோடி செலவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மருத்துவ பணிகளுக்காகவும், நிவாரணப் பணிகளுக்காகவும் தமிழக அரசு ஒதுக்கியுள்ள தொகை மிகச் சொற்பமானதே. அடுத்த பல மாதங்களுக்கு நோய்த் தொற்று மற்றும் மருத்துவ பணிகளுக்காகவும், மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காகவும் மேலும் பல ஆயிரம் கோடிகளை செலவழிக்க வேண்டியுள்ளது. மத்திய அரசும், தமிழக அரசு கோரியுள்ள நிதியினை வழங்கவில்லை. கடன் தொகையைப் பெற்றே தற்போது தமிழக அரசு நிலைமைகளை சமாளித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று மற்றும் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து மக்களை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசின் முன் உள்ளது என்று கூறிய பாலகிருஷ்ணன், எனவே, சாலைகள், பொதுப்பணித்துறை மற்ற பணிகள் அவசியம் என்ற போதிலும், கொரோனாவை எதிர்த்த பணிக்கு கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் வகையில், தமிழக அரசு திட்டமிட்டு பணியாற்றுவதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இத்தகைய சூழ்நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ. 10,000 கோடிக்கான டெண்டர்களை கோருவதும், அதிலும் மேலே குறிப்பிட்டுள்ள பல விமர்சனங்களும், கேள்விகளும் எழும்பியுள்ள நிலையில் இந்த டெண்டர் அவசியம் தானா என கேள்வி எழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “.தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறையில் மிகவும் அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளைத் தவிர இதர பணிகளுக்கான டெண்டர்களை நிறுத்தி வைத்து, அந்த நிதியினை கொரோனா மருத்துவம் மற்றும் மக்களது நிவாரணப் பணிகளுக்கு செலவழிக்க வேண்டும்” என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். எழில்
Muralidharan Pb : வசந்த காலம் - 9 சமூக நீதிக் காவலர்கள். மண்டல் கமிஷன் வரலாறு. கலைஞர், விபி சிங் இருவரும் சரித்திரம் படைத்த இன்றியமையா சாதனை மண்டல் கமிஷன் அமல்படுத்தியதே. மண்டல் கமிஷன் கேள்வியுற்றிருப்போம். அது ஏன் ? எதற்கு ? எப்படி நிறைவேற்றம் பெற்றது என்று சற்று விரிவாக பார்த்தால் தான் தெரியும் இந்த இருவர் அடுத்த தலைமுறைக்கு எவ்வளவு பெரிய உரிமையைக் கொடையாக கொடுத்துச் சென்றுள்ளார்கள் என்பதை உணரமுடியும். சமூக நீதி என்பது திமுகவின் உயிர்நாடி. மண்டல் கமிஷன் அமைக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் முன்பாக 1973ல் அக்டோபர் திங்கள், அலகாபாத் நகரில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்தார் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி. அவர் பேசியது. "மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாத்திரம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கியிருக்கிறது. அந்த இட ஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்டோருக்கும் அமல்படுத்த மத்திய அரசு முன்வந்து அதற்காவான செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார். சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிக் கிடக்கும் மக்களை தனி ஒதுக்கீடுகள், சிறப்பு திட்டங்கள் மூலமாக கைதூக்கிவிட மண்டல் குழுவின் பரிந்துரையை திமுக, 1989ல் ஆட்சிப் பொறுப்பேற்ற 4 மாதங்களில் அதாவது 12/5/1989ல் சட்டப்பேரவையில் முன் மொழிந்தது, சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றியது. மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் 1978ம் வருடம் டிசம்பர் மாதம் மண்டல் குழு அமைக்கப்பட்டு, 31/12/1980ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அது நாடாளுமன்றத்தில் வைக்க எடுத்துக்கொண்ட காலம் 2 ஆண்டுகள். பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மண்டல் கமிஷன் கூறும் பரிந்துரை என்ன ? மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார்புடைய நிறுவனங்களில் உள்ள அனைத்து பணிகளிலும் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர்கள், பழங்குடி மக்களுக்கு உள்ளது போல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நிரப்பப்படாமல் உள்ள இடஒதுக்கீட்டளவு மூன்றாண்டுகளுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கொடுப்பது போலவே - அதே அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் மத்திய அரசு, நிதி உதவி அளிக்க வேண்டும். மத்திய அரசும் மாநில அரசுகளும்,பிற்படுத்தப்பட்டோர் நல முன்னேற்ற வாரியம் அமைக்க வேண்டும். 1977 திமுக ஆட்சியை இழந்து, திமுக எதிர்க்கட்சியாக இருந்த வேளையில், திராவிடர் கழகம் உட்பட வேறு சில அமைப்புகளோடு டெல்லியில் உள்ள பிற்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு சில அமைப்புகளோடும் உண்ணா நோன்பு இருந்து ஆர்ப்பாட்டம் செய்தது. இது நிறைய பேர் அறியாத விவரம். மண்டல் கமிஷன் பரிந்துரையின் படி, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் கலைஞரால் 1971லேயே தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. மண்டல் கமிஷன், குறிப்பிட்ட மாநில அரசுகளின் கீழ் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி அமைச்சகம், தனித்துறை அமைக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறது. மண்டல் கமிஷன் 1978ல் தனது பரிந்துரைகளை வழங்கியது. ஆனால் கலைஞர் கருணாநிதி அரசு இதையெல்லாம் 1971லேயே செய்து முடிந்துவிட்டது. கலைஞரைப் போல் ஒரு ஞானியை பார்ப்பது அரிதிலும் அரிது. பி.பி.மண்டல் என்ற பாராளுமன்ற உறுப்பினர் 1978ல் செய்யச் சொன்ன சீர்திருத்தங்களை, முதல்வராக இருந்த இவர் 1971ல் ஏற்பாடுகள் செய்தது அவர் அறிவாற்றலை காட்டுகிறது. திராவிட இயக்க கொள்கையை சுவாசிக்கும் ஒருவரால் மட்டுமே இப்படி ஒரே தீர்க்கமான முடிவினை எடுக்க முடியும். ஜனதா அரசு சொன்னது ஒன்று, செய்தது ஒன்று. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதற்கு பதிலாக பொருளாதாரம் அடிப்படையில் அதாவது ஆண்டு வருமானம் 9000க்கும் கீழ் உள்ள குடும்பங்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெற முடியும் என்று ஒரு அறிவிப்பை செய்தது. இந்த ஏற்பாட்டை ஆதரித்தது அன்றைய முதல்வர் எம்ஜிஆர். திமுக பல முறை கேட்டு, இந்திரா காந்தி அம்மையார் காது கொடுத்து கேட்கவில்லை. அடுத்த ஆட்சி ராஜீவ் அரசு, அப்போதும் எம்ஜிஆர் அரசு இதை எடுத்து பேச முன் வரவில்லை. 1989ல் திமுக ஆட்சியில் கலைஞர் ராஜீவை பல்வேறு முறை நடத்திய சந்திப்பின் போதும் எடுத்துக் கூறியும் பெரும்பலம் பொருந்திய ராஜீவ் அரசு செவிமடுக்கவில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்க யாருமே முன் வராத சூழல். கலைஞருக்கு அந்த சந்தர்ப்பம் எப்படி அமைகிறது ? அப்போதைய முன்னாள் குடியரசு தலைவர் ஜெயில் சிங், தஞ்சாவூரில் சமூக நீதி மாநாட்டில் கலந்துக் கொண்டு,"தமிழ்நாட்டு மக்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் திறமைக்கும், வேகத்திற்கும், அன்புக்கும், அருளுக்கும், நல்ல நிர்வாகத் திறமைக்கும், பிரச்சனைகளை அணுகவர்க்குமுரிய ஒரு மகத்தான தலைவர் வாழும் சிறப்பு மிக்கத் தலைவர் காலத்தில் வாழ்கின்றார்கள். அந்த அருந்தலைவர் தான் கலைஞர் கருணாநிதி, அவருடைய ஆட்சி தான் புதுடெல்லியில் நடக்கிறது. தயவுசெய்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, அதை சட்டமாக ஏற்படுத்துவதற்கு அவரைக் கேட்டுக்க்கொள்கிறேன். அதற்கு பதிலளித்து முதல்வர் கலைஞர், "டெல்லி செல்லும் போதெல்லாம் மண்டல் கமிஷன் பரிந்துரைகளைப் பற்றி நினைவூட்டிக் கொண்டிருப்பதாகவும், அதனை நிறைவேற்ற ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஜெயில் சிங் அவரது அன்புக்கட்டளையை ஏற்று அவரோடு இணைந்து விரைவில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன்" என்று குறிப்பிட்டார். அந்த முயற்சியில் வெற்றி கிடைத்த வண்ணமாக மே 30 1990 அன்று நடந்த தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் விபி சிங், மண்டல் கமிஷன் உட்பட தேர்தலில் தேசிய முன்னணி அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றிய தீர வேண்டும் என்று அறிவித்தார். பிப்ரவரி 1990ல், டெல்லியில் இது பற்றி கலைஞர் துணைப் பிரதமர் தேவிலாலை சந்தித்த போதே ஒரு யோசனை கூறி இருந்தார். 'அதாவது நடுவண் அரசு யார் யாரெல்லாம் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதை நிர்ணயிப்பது கடினம். ஆகவே ஒவ்வொரு மாநிலமும் தனது அரசின் கீழ் யார் யார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று பட்டியல் வைத்திருக்கும். அதன் படியே அமல்ப்படுத்திடலாம் என்று கூறினார். அதோடு மட்டுமல்லாமல் 1926லேயே இட ஒதுக்கீட்டு முறையை கொண்டுவந்ததே திராவிட இயக்கம் தான் எனவும், அந்த போராட்டங்களை நடத்திய திராவிட இயக்கம் காரணமாகத்தான் நேரு அவர்கள் அரசியல் சட்டத்திலே 1952 ஆம் ஆண்டு திருத்தம் செய்ய முன்வந்தார்கள். எனவே இடஒதுக்கீட்டு முறையின் முன்னோடி திராவிட இயக்கங்கள், ஏதேனும் சந்தேகம் எழுமேயானால் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விளக்கம் கொடுத்து உதவிட தயாராக உள்ளோம்' என்று பேசி இருந்தார். ஜூன் 1990ல் பிரதமர் விபி சிங் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினர். பத்தாண்டு காலமாக மண்டல் கமிஷன் பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது பற்றியும், தேசிய முன்னணி அரசு அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க விரும்புவதாகவும், எனவே மாநில அரசுகள் அந்த அறிக்கை மீதான தங்கள் கருத்துக்களை ஒரு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும். அப்படி அனுப்பிய கடிதத்திற்கு முதலில் பதில் எழுதிய மாநிலம் தமிழ்நாடு. 7 ஆகஸ்ட் 1990ல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை பிரதமர் விபி சிங் வெளியிட்டார். முதல் கட்டமாக, மாநில பட்டியல்களிலும், மண்டல் கமிஷன் அறிக்கைகளிலும் பொதுவாகக் கோரப்பட்ட வகுப்புகள் அடிப்படையாக வைக்கப்படும் என்றும், தங்களது நீண்டகால அனுபவங்களிலும் அடிப்படையில் மாநிலங்கள் தயாரித்து வைத்துள்ள சமுதாய ரீதியிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலை அடிப்படையாக ஏற்கக் காரணம் மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் சிரமமின்றி அதே நேரத்தில் விரைவாக அமுல்படுத்துவதற்காகத்தான் என்றும் பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.மொத்தத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் என்பது.கதைதிரைக்கதைவசனம் - கலைஞர் மு கருணாநிதி, இயக்கம் விஷ்வநாத் பிரதாப் சிங்.இன்னொரு ஒற்றுமையும் அந்த தேதியில் உள்ளது அது நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்த நாள் நமது அருமைத் தலைவர் மறைந்த ஆகஸ்ட் 7 என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது மண்டல் கமிஷன் மூலமாக வேலை பெற்ற பலர் இன்றும் திமுக மீதும், கலைஞர் மீதும் விசுவாசமாக உள்ளனர். அவர்கள் தங்களது வாரிசுகளுக்கு இந்த விவரங்களை தெரிவிக்க மறந்து விட்டமையால் நம்மைப் போன்றோர் இதை உணர்த்துவோம். என்ன கிழித்தது திராவிடம்? என்போருக்கு, திமுக ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டுள்ளோருக்கு உரிமையை பெற்றுக்கொடுத்து உள்ளது. போலி திராவிடம் பேசிய அதிமுக, சோசியலிசம் பேசிய ஜனதா, மதச்சார்பின்மை பேசிய காங்கிரஸ் செய்து கிழிக்காததை, திமுக தான் கிழித்தது என்று கூறிக்கொண்டு இந்த பதிவு நிறைவுபெறுகிறது. மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றிய விபி சிங்கைப் பாராட்டி முதல்வர் கலைஞர் எழுதிய கடிதம் முதல் பின்னூட்டத்தில் உங்களுக்காக. வசந்த காலம் தொடரும், நன்றி நாளை மீண்டும் சந்திப்போம். அடுத்தது : காவிரியும், கலைஞரும்
Kathir RS : கேள்வி: பெனிக்ஸ் நாம் தமிழர் ஆதரவாளராமே? கலைஞர் ஸ்டாலின் உதயநிதி ஆகியோரை கிண்டல் செய்து நிறைய பதிவு போட்டிருக்கிறாராமே .முன்பே தெரிந்திருந்தால் திமுக தலையிட்டிருக்காதோ..? ஹாஹாஹா! பதில்: பிறந்த குழந்தை மீதும் இறந்த மனிதன் மீதும் சாதி மதத்தை மட்டுமல்ல அரசியலைத் திணிப்பதையும் எதிர்ப்பவர்கள் பகுத்தறிவாளர்கள். தந்தை மகன் இருவரும் கொல்லப்பட்டதை எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் முதன் முதலாக பதிவு செய்து நியாயம் கேட்டவர் மு.க.ஸ்டாலின் தான்.அப்போது இந்த பிரச்சனை அரசியல் மட்டத்தில் கூட விவாதப் பொருளாகவில்லை.இரண்டு நாட்கள் கழித்துதான் சுசித்ராவின் ஆங்கில வீடியோ வந்தது. அதைக்கூட அதிகம் தங்கள் டைம் லைனில் பதிவிட்டவர்கள் பரப்பியவர்கள் திமுகவினரே. அந்த வீடியோ பகிரப்பட்ட போது #சுச்சிலீக்ஸ் என கிண்டல் செய்தவர்களை எதிர்த்து சண்டை செய்தவர்களும் திமுகவினரே. என்ன எல்லாத்துக்கும் திமுக என்று சொல்கிறேன் என்று நீங்கள் கருதலாம்..நான் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழ்நாட்டில் திமுக ஆதரவாளர்களும் அதிமுக ஆதரவாளர்களும் கிட்டத்தட்ட சரிபாதி..தமிழக மக்கள் தொகையில் 90 சதவீதத்தினர் அவர்களே ஆவர்.மீதமுள்ளவர்கள்தான் இந்த சங்கிகளும், யானைக்குட்டிகளும்,ஆமைகுஞ்சுகளும். ஆளுங்கட்சியினர் இதை பேச வில்லை..சங்கிகள் இதற்கு மாறாக எதிராக பேசினர். மீதமுள்ளவர்களில் சிலர் மட்டுமே பேசினார்கள்..முக்கியமாக இடது சாரிகள்..சில பெரியாரியவாதிகள்..ஆனால் மொத்தமாக அது 4-5% ஐத் தாண்டாது... ஆக இந்த பிரச்சனையை ஆரம்பம் முதலே பேசியவர்களும் சுசித்ராவின் வீடியோவை அதிக அளவில் பகிர்ந்தவர்களும் திமுவினர்தான் என்று நான் சொல்வதில் உள்ள உண்மை இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கேள்வியின் முக்கிய பகுதிக்கு வருகிறேன். ஆம் பெனிக்ஸ் திமுகவை எதிர்த்து பதிவிட்ட நாம் தமிழர் தம்பிதான்.அது முன்பே அரசியல் மட்டத்தில் யாருக்கும் தெரியாதுதான். திமுக இன்று ஆட்சியில் இல்லை..ஆனால் இந்திய அரசியலமைப்பின் படி ஒரு அதிகாரப் பூர்வ எதிர்கட்சி. எதிர்கட்சி என்றால் திமுக கட்சி மட்டும் தான் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை. ஆளுங்கட்சியின் கூட்டணியைத் தவிர மீதமிருக்கும் அத்தனை கட்சிகளுக்கும் திமுகதான் அரசியல் ரீதியான தலைமை. அது நாம் தமிழருக்கும் சேர்த்துதான் என்று நான் சொல்லத் தேவையில்லை. ஆக அமைப்பு ரீதியாக நாதகவின் சட்டமன்ற அரசியல் பிரதிநிதி மு.க.ஸ்டாலின் தான். இதை கேட்க கடினமாக இருந்தால் அவர்களுக்கு ஒரு வழியிருக்கிறது..ஓடிப்போய் பாஜக கூட்டணியில் அஃபிசியலாக சேர்ந்து கொள்ளலாம். ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை..இத்தனை நாள் மறைமுகமாக செயல் பட்டவர்கள் நேரடியாக செயல் படப் போகிறார்கள் அவ்வளவுதானே! ஃபெனிக்ஸ் எவராக இருந்தாலும்..அவர் ஆளும் அரசின் அதிகாரத்தால் உயிர்துறந்த இந்த மண்ணின் மைந்தன்.அவருக்கு குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனின் கடமை.ஒரு தலைவனின் கடமையும். அதைத்தான் திமுக தலைவரும் திமுக இணைய செயற்பாட்டாளர்களும் செய்திருக்கின்றனர்.நாளை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரோ பாஜகவைச் சேர்ந்தவரோ பாதிக்கப்பட்டாலும் திமுக நிச்சயம் குரல் கொடுக்கும்.அதுதான் திமுக.