Tuesday, June 30, 2020

BREAKING : அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி

DINASUVADU:உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அரசு.
இதனிடையே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.ஆனால் இதற்கு அமைச்சர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது.தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: