Monday, June 29, 2020

பெற்ற மகள் என்றும் பார்க்காமல் துஸ்பிரயோகம் செய்த தந்தை!

காய்ச்ல் மாத்திரை எனக்கூறிய் மயக்க மாத்திரையை கொடுத்து, பெற்ற தகப்பனே தனது மகளை துஸ்பிரயோகம் செய்த செயல், பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் ஹரலூர் பகுதியில் வசிக்கும் ஒரு 19 வயது பெண்ணிற்கு கடுமையான காய்ச்சலுடன் இருமல் இருந்ததால்,  தனது தந்தையிடம் ஏதாவது மாத்திரை தருமாறு கேட்டுள்ளார்.

இதற்கு சில மாத்திரைகளை கொடுத்து இதனை  சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும் எனகூறி அந்த பெண்ணின் தந்தை சில மாத்திரைகளை  கொடுத்துள்ளார்.

அதனை சாப்பிட்ட அப்பெண் சொற்ப நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். இதனை அடுத்து பெற்ற மகள் என்றுகூட பார்க்காமல் தனது மகளை துஸ்பிரயோகம் செய்துள்ளார் அந்த பெண்ணின் தந்தை.

இதனை அடுத்து மயக்கம் தெளிந்த குறித்த இளம் பெண், தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதை உணர்ந்து கொண்டார்.

இதனை தனது சித்தியிடம் (தந்தையின் 2ம்மனைவியிடம்) சென்று கூறி காவல்நிலையத்தில் முறையிடலாம் என கேட்டுள்ளார். ஆனால் சற்றும் மனசாட்சி இல்லாமல், என்னால் உதவ முடியாது என கூறியுள்ளார் அப்பெண்ணின் சித்தி.

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண், பாத்ரூம் கெமிக்கலை குடித்து விட்டு காவல்நிலையம் சென்று நடந்த சம்பவங்களை புகாரளித்தார்.

விரைந்து செயற்பட்ட காவல்துறையினர், தற்கொலைக்கு முயன்ற குறித்த இளம்பெண்ணை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அந்த பெண்ணின் தந்தையை கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்திற்கு தந்தையின் 2ம் மனைவி உடந்தையாக இருந்தாரா என்பது தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: