Showing posts with label NATIONAL. Show all posts
Showing posts with label NATIONAL. Show all posts

Thursday, July 9, 2020

4 மாதமாக நரக வேதனை.. இருட்டு அறையில் சித்ரவதை.. போலீசும், டாக்டரும் செய்த கொடூரம்.!!

4 மாதமாக நரக வேதனை.. இருட்டு அறையில் சித்ரவதை.. போலீசும், டாக்டரும் செய்த கொடூரம்.!!

ஒடிஷா மாநிலத்தில் உள்ள பிரமித்தாராபூர் பகுதியில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி 14 வயது சிறுமி அங்கு நடைபெற்ற கண்காட்சியை காண வந்துள்ளார். இந்நிலையில், அன்று இரவு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் ஊருக்கு செல்ல வழியில்லாமல் நின்ற சிறுமியை கவனித்த அப்பகுதி இன்ஸ்பெக்ட்டர், பாதுகாப்பு தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த நான்கு மாதமாக சிறுமியை மறைமுகமாக வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனால் சிறுமி தற்போது கர்ப்பமடையவே, இதனை அறிந்த காவல் அதிகாரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அழைத்து சென்று தனது பதவியை வைத்து கருக்கலைப்பு செய்துள்ளார். கருக்கலைப்பு செய்த பின்னர் சிறுமி எப்படியோ தப்பித்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
அங்கு தனது பெற்றோர்களிடம் நடந்ததை கூறவே, பெற்றோர்கள் அங்குள்ள எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளனர். எஸ்.பியின் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கருக்கலைப்பு செய்த அரசு டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Saturday, July 4, 2020

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் ஜூன் 4 ம் தேதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பாதையில் போர்நிறுத்தத்தை மீறியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் ஜூன் 4 ம் தேதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பாதையில் போர்நிறுத்தத்தை மீறியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் ஜூன் 4 ம் தேதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பாதையில் போர்நிறுத்தத்தை மீறியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இரவு 7.45 மணியளவில் மோட்டார் ஷெல் மற்றும் சிறிய கை துப்பாக்கிச் சூடு எல்லையைத் தாண்டி தொடங்கியது என்று அவர் கூறினார். டெக்வார் துறையில் மற்றும் இந்திய இராணுவம் ஒரு பொருத்தமான பதிலை அளித்தது. கடைசியாக அறிக்கைகள் வந்தபோது எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடந்து வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்திய தரப்பில் எந்த விபத்து ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை.

சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தி வரும் இந்திய செயலிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில், அவற்றின் ஆற்றலை அளவிடுவதில் கவனம் செலுத்தும் சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கி வைத்தார்.
உலகத்தரம் வாய்ந்த மேட் இன் இந்தியா செயலிகளை உருவாக்குவதில் , தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் இடையே பெரும் ஊக்கம் தற்போது காணப்படுகிறது. அவர்களது சிந்தனைகளுக்கும், பொருள்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், @GoI_MeitY and @AIMtoInnovate ஆகியவை சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கியுள்ளன.
உங்களிடம் இது போன்ற செயல்படுத்தும் பொருள் இருந்தாலோ அல்லது இதுபோன்ற பொருள்களை உருவாக்கும் தொலைநோக்கும், வல்லமையும் உங்களிடம் இருப்பதாகக் கருதினாலோ, இது உங்களுக்கான சவாலாகும். தொழில்நுட்ப சமுதாயத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்'', என்று பிரதமர் கூறினார்.
தமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்திய அதிகார வர்க்கம்

தமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்திய அதிகார வர்க்கம்

சாந்தி நாராயணன் : ஆயிரம் பேருக்கு எத்தனை மருத்துவர்கள் ?!ஜெர்மனி -4.3
இத்தாலி - 4
தமிழ் நாடு - 3.95
ஸ்பெயின் - 3.9
ஆஸ்திரேலிய - 3.7 . சிறந்த எண்ணிக்கையில் மருத்துவர்கள் உள்ள மாநிலங்கள்
தமிழகத்தில் 253 பேருக்கு ஒரு மருத்துவர்
டெல்லியில் 334 பேருக்கு ஒரு மருத்துவர்
கர்நாடகாவில் 507 பேருக்கு ஒரு மருத்துவர்
கேரளா 535 பேருக்கு ஒரு மருத்துவர்
கோவா 713 பேருக்கு ஒரு மருத்துவர்
மருத்துவர்கள்
மோசமான /பற்றாக்குறை எண்ணிக்கயில் உள்ள மாநிலங்கள்
ஜார்கண்ட் 8180 பேருக்கு ஒரு மருத்துவர்
ஹரியானா 6037 பேருக்கு ஒரு மருத்துவர்
சட்டிஷ்கார் 4338 பேருக்கு ஒரு மருத்துவர்
உத்தர பிரதேசம் 3767 பேருக்கு ஒரு மருத்துவர்
பீகார் 3207 பேருக்கு ஒரு மருத்துவர்.
உண்மையில் நீதியுள்ள ஒரு மத்திய அரசு,
தமிழகத்துக்கு இணையாக பிற வட மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இங்கு தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திராவிட கட்சிகள் , அதிலும் திமுக மருத்துவ கல்லூரிகளை மாவட்டத்துக்கு மாவட்டம் ஏற்படுத்தி இந்தியாவின் சிறந்த மட்டுமல்ல, உலகின் மூன்றாவது சிறந்த மருத்துவ கட்டமைப்பு உள்ள நாடாக தமிழகத்தை உருவாக்கி உள்ளனர்.
மத்திய அரசோ, இங்குள்ள மருத்துவ இடங்களை நீட் என்ற பெயரால் கொள்ளை அடிக்கிறது.
பரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் பாதுகாப்பு கேள்விகுறி?

பரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் பாதுகாப்பு கேள்விகுறி?

தினமலர் : பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், 20 கைதிகள் உட்பட, 26 பேரை கொரோனா தொற்று பாதித்துள்ளது.
இதனால், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கடும்
பீதியடைந்துள்ளார்.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு, புதிதாக வந்த கைதிகள் உட்பட, 150 பேரின் திரவ மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், சிறையின் ஆறு ஊழியர்கள், 20 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.


சிறையில், 5,000க்கும் அதிகமான ஆண், பெண் கைதிகள் உள்ளனர். நேற்றைய தகவல்படி, ஆண் கைதிகளுக்கு மட்டுமே தொற்று தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆண் கைதிகளின் சிறைக்குப் பக்கத்தில் தான், சசிகலா உட்பட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், சசிகலா உட்பட அனைவருமே பீதியடைந்துள்ளனர்.
புதிதாக வரும் கைதிகளை, 21 நாட்கள் தனிமையில் வைத்து, எந்த அறிகுறியும் இல்லை என்றால் மட்டுமே சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.