Sunday, June 28, 2020

மற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன் கொலை



போலீசார் அடித்து சித்ரவதை செய்ததால் தென்காசி வீகேபுதூர் வாலிபர்
இன்று மரணம்.... தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் 25 வயது குமரேசன். குமரேசன் மீது செந்தில் என்பவர் கொடுத்த இடப்பிரச்சனை சம்பந்தமான புகாரின் பேரில் கடந்த மே 8 அன்று போலீசாரின் விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அடித்து அனுப்பி விட்டார்.
மீண்டும் மே 10 அன்று விசாரணைக்கு குமரேசனை போலீஸ் ஸ்டேசனுக்கு வரச் சொல்லிய காரணத்தால் குமரேசனும் வீகேபுதூர் போலீஸ் ஸ்டேசன் சென்றுள்ளார்.
குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் என்கிற போலீசும் சேர்ந்து மிக கொடூரமாக தாக்கிய உள்ளனர்.
பூட்ஸ் காலால் வயிறு , முதுகு பகுதியில் விதித்துள்ளனர். இரு கால்களையும் நீட்டச் சொல்லி அதன் மீது இருவரும் பூட்ஸ் காலால் ஏறி நின்றுள்ளனர். முதுகில் கையால் மாறி மாறி குத்தியுள்ளார். லத்தியால் முதுகில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும், சொன்னால் பொய் கேஸ் போடுவோம். உன் அப்பனையும் அடிப்போம் என்று மிரட்டி உள்ளனர்.
இதனால் பயந்து போன குமரேசன் சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை. ஜூன் 10 அன்று குமரேசன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். சுரண்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து ஜூன் 12 அன்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


மருத்துவமனை மருத்துவர் கேட்ட பிறகு தான் குமரேசன் தனக்கு நடந்த கொடுமைகளை சொல்லி உள்ளார்.
கல்லீரலும், கிட்னியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் குமரேசனின் தந்தையிடம் கூறியுள்ளார். இதன் பேரில் தென்காசி காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு குமரேசனின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் ஆய்வாளர் ஒருவரை விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாக எஸ்பி தெரிவித்தார். இந்நிலையில் 16 நாட்களாக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவல்துறையின் கடும் சித்ரவதையால் சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து குமரேசனின் மரணமும் காவல்துறையின் மிருகத்தனமும் அம்பலத்துக்கு வந்துள்ளது......
KG Baskaran

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: