Tuesday, June 30, 2020

சாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் விசாரணை!

நக்கீரன் : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றனர்.காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிஸார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர்.

அவர்களின் மரணம் அடைய அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக கோவில்பட்டி மாஜிஸ்திரேட் நேற்று விசாரணை நடத்தினார். இதில் காவலர்கள் போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை மீண்டும் சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தற்போது காவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: