Tuesday, June 30, 2020

கோவையில் 10-ம் வகுப்பு மாணவரை காவல்துறையினர் தாக்‍கிய சம்பவம் - 2 வாரங்களில் அறிக்‍கை தாக்‍கல் செய்ய, காவல் ஆணையருக்‍கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோவையில் 10-ம் வகுப்பு மாணவனை காவல் துறையினர் தாக்கிய சம்பவம் தொடர்பாக, 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய, கோவை காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


கோவை ரத்தினகிரி பகுதியில் டிபன் கடை நடத்தி வந்தவர்களிடம், அப்பகுதி உதவி ஆய்வாளர் செல்லமணி அத்துமீறி நடந்து கொண்டார். இந்த சம்பவத்தை, டிபன் கடை நடத்தி வந்தவரின் மகனான பத்தாம் வகுப்பு மாணவன், தனது சொல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைப்பார்த்த உதவி ஆய்வாளர், வீடியோவை அழிக்கும்படி மிரட்டியதுடன், செல்போனை மாணவனிடமிருந்து பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட முற்பட்டார். அப்போது, அந்த மாணவன் உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகன சாவியை எடுத்து வைத்துக் கொண்டார். இதையடுத்து போலீசார் மாணவனை லத்தியால் கடுமையாக தாக்கினர். தாயின் கண்முன்னே போலீசார் மாணவனை அடிக்கும் வீடியோ, அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய, கோவை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: